நீங்க ஒரு வார்த்தை சொன்னிங்கன்னா போதும் விஜய் அண்ணா - தளபதியிடம் கோரிக்கை வைத்த டிடி!

விஜய் மற்றும் டிடி

20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை தொகுப்பாளினியாக இருக்கும் டிடி,கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட தளபதி விஜயிடம் ப்ளீஸ் அண்ணா என்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சின்னத்திரையில் ரசிகர்கள் பெரிதும் விரும்பும் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை தொகுப்பாளினியாக இருக்கும் டிடி,கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட தளபதி விஜயிடம் ப்ளீஸ் அண்ணா என்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு ஐகான்ஸ் (Behindwoods Gold Icons) விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற ஸ்டார் விஜய் டிவியில் தொகுப்பாளினியா இருந்து வரும் டிடியும் வந்திருந்தார்.

விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்குஅரங்கினுள் செல்லும் முன் அங்கு வந்த டிவி பிரபலங்களிடம் வேடிக்கையான கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த வகையில் விஜே நிக்கி, டிடிஇடம் பல சுவாரசியமான கேள்விகளை வேடிக்கையாக கேட்டார். மேலும் ஒரு குட்டி பையில் இருந்த சில பொருட்களை டிடியிடம் கொடுத்து இதை யாருக்கு தர நீங்கள் நினைக்கிறீர்கள் என்று ஒவ்வொரு பொருளாக கேட்டார். முதலில் லிப்ஸ்டிக் ஒன்றை எடுத்து மேக் அப் இல்லாமல் அழகாக தோன்றும் நடிகைக்கு இதை கொடுக்க வேண்டும் என்றால் யாருக்கு கொடுக்க நினைக்கிறீர்கள் என்றார்.

த்ரிஷாவிற்கு கொடுப்பதாக கூறினார். அடுத்து கையில் அணியும் சில்வர் காப்பை தல அஜித்துக்கு டெடிகேட்செய்வதாக டிடி குறிப்பிட்டார். ஏனென்றால் என்னை அறிந்தால் படத்தில் வெள்ளை ஷர்ட்டுடன் கையில் சில்வர் காப்புடன் தல அஜித் நடந்து வருவது கெத்தாக இருக்கும் என்பதால் காப்பு அவருக்கு சரியாக இருக்கும் என்றார். இதேபோல் பிஹைண்ட்வுட்ஸ்க்கு அழகான ஸ்மைலி, ஜெயிலில் இருக்கும் நண்பர் ஒருவரை மீட்பதற்கான சாவியை, அனைவரையும் ஜோக் சொல்லி கொல்லும் தங்கதுரையை காப்பாற்ற பயன்படுத்த நினைப்பதாக வேடிக்கையாக குறிப்பிட்டார்.

Also read... இறந்த பிறகு 8-12 வாரங்களுக்குள் தடுப்பூசியின் 2வது டோஸை பெற முடியுமா? நடிகர் சித்தார்த் கேள்வி!

தொடர்ந்து டிடி-யின் நண்பரான நெல்சன் திலீப்குமார் தளபதி 65 திரைப்படம் இயக்குவதை பற்றி விஜே நிக்கி கேட்டார். அந்த படம் பற்றி ஏதாவது உங்களுக்கு அப்டேட் கொடுப்பாரா என்று. இதற்கு பதிலளித்த டிடி, அவரும் அப்டேட் எதுவும் கொடுக்க மாட்டார், நானும் கேட்க மாட்டேன். டேய் விஜய் சார் என்னடா சொல்கிறார் என்று கேட்டால் உன் கூட தான் பேச கூடாது என்கிறார் என்று டிடி சிரித்து கொண்டே கூறினார். தொடர்ந்து பேசிய டிடி விஜய் சார பாக்கணும் ,நாங்க ரொம்ப கெஞ்சி கேக்கறோம் ஒரே ஒரு முறை குடும்பமா கூட்டிட்டு போடானு. ஆனால் நெல்சன் முடியவே முடியாது, உங்களையெல்லாம் கூட்டிட்டு போக முடியாதுனு அடம் பிடிக்கிறார்.

இருந்தாலும் கெஞ்சி கேக்கறோம். நீங்க ஒரு வார்த்தை சொன்னிங்கன்னா (விஜய்)ணா, நெல்சன் உங்களை பாக்க எங்களை கூட்டிட்டு வரத்துக்கு ஒரு வாய்ப்பு இருக்குங்கன்ணா என்று கியூட்டாக தளபதி விஜய்க்கு ரெக்வஸ்ட் வைத்துள்ளார் டிடி. இதே போல நீங்க இவ்வளவு பொறுமையா இருக்கிறதே பெரிய விஷயம், ஸோ நெல்சனை நீங்க உள்ளேயே விடாதீங்க என்று இசையமைப்பாளர் அனிருத்துக்கும் ஒரு ரெக்வஸ்ட் வைத்துள்ளார் டிடி. தளபதி 65 செட்டில் தளபதியை சந்திக்க தங்களை அனுமதிக்குமாறு நெல்சனுக்கு தெரிவிக்கும் படி விஜயை டிடி கேட்டு கொண்டுள்ளது தளபதி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: