Anbudan Kushi: 300-வது எபிசோடை கேக் வெட்டி கொண்டாடிய 'அன்புடன் குஷி' டீம் - ரசிகர்களுக்கு நன்றி!

அன்புடன் குஷி

முதலாளியின் மகளான குஷி ஃபேஷன் டிசைனராக வெளிநாடு சென்று படிக்க ஆசைப்படுகிறார்.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் 'அன்புடன் குஷி'. இந்த சீரியலில் ப்ரஜின் பத்மநாபன் மற்றும் ஷ்ரேயா அஞ்சன் ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் அன்பு என்ற கேரக்டரில் ப்ரஜின் நடிக்க அவருக்கு ஜோடியாக, குஷி என்ற கேரக்டரில் ஷ்ரேயா அஞ்சன் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் துவங்கிய போது நடிகர் ப்ரஜினுக்கு ஜோடியாக குஷி கேரக்டரில் மான்சி ஜோஷி என்பவர் நடித்து வந்தார்.

பின்னர் அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதை அடுத்து ரேஷ்மா வெங்கடேஷ் குஷி கேரக்டரில் நடித்து வந்தார். இவரும் சில மாதங்களுக்கு முன் அன்புடன் குஷி சீரியலில் இருந்து விலகியதை அடுத்து நடிகை ஷ்ரேயா அஞ்சன் தற்போது குஷி கேரக்டரில் நடித்து வருகிறார். ராஜா ராணி சீசன் 2வில் ஹீரோவாக நடித்து வரும் சித்துவின் காதல் மனைவி தான் ஷ்ரேயா அஞ்சன். ஷ்ரேயா அஞ்சன் இந்த சீரியலில் இணைந்த பொது 200-க்கும் மேற்பட்ட எபிசோட்கள் தாண்டி இருந்தது. ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தின் வீட்டில் வேலை சோதித்து வரும் அன்பு, முதலாளி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலாளியின் மகளான குஷி ஃபேஷன் டிசைனராக வெளிநாடு சென்று படிக்க ஆசைப்படுகிறார். ஆனால் குடும்பத்தினரின் விருப்பப்படி ராஜஸ்தானி பையனை திருமணம் செய்து கொண்டால் தனது கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறாள். கிஷியின் ஆசை மற்றும் அன்பு - குஷி இடையேயான காதல் மற்றும் திருமணம் உள்ளிட்டவற்றை சுற்றி இந்த சீரியலின் கதைக்களம் உள்ளது.

இந்நிலையில் 'அன்புடன் குஷி' சீரியல் வெற்றிகரமாக 300 எபிசோட்களை கடந்துள்ளது. இந்த சந்தோஷ நிகழ்வை சீரியல் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பாக நடிகர் ப்ரஜின் மற்றும் நடிகை ஷ்ரேயா அஞ்சன் இருவரும் தங்களது இன்ஸ்டாவில் ஃபோட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.

Also read... Vishal: விஷால் படத்தில் பாரதி கண்ணம்மா நடிகர் - வெளியான புகைப்படம்!

நடிகை ஷ்ரேயா அஞ்சன் தனது இன்ஸ்டாவில் "அன்புடன் குஷி 300-வது எபிசோட் கொண்டாட்டம்" என்று பதிவிட்டு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோவை ஷேர் செய்து உள்ளார். மேலும் அன்புடன் குஷியின் 300 வது எபிசோட் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி மற்றும்மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றிகரமான மைல்கல்லை எட்டிய அன்புடன் குஷியின் முழு அணியினருக்கும் வாழ்த்துக்கள்.







இந்த மிக அழகான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்கிறேன். இந்த அற்புத வாய்ப்பிற்காக அன்புடன் குஷி குழு மற்றும் விஜய் தொலைக்காட்சிக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். நடிகர் ப்ரஜினும் ANBUDAN KUSHI TEAM 300TH EPISODE என்ற கேப்ஷனிட்டு கேக் வெட்டும் ஃபோட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: