• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Anbe sivam Serial : ஸ்டன்ட் ரொமான்ஸ் பாத்திருக்கீங்களா ? அன்பே சிவம் சீரியல் செட்டில் நடந்த சுவாரஸ்யம்..

Anbe sivam Serial : ஸ்டன்ட் ரொமான்ஸ் பாத்திருக்கீங்களா ? அன்பே சிவம் சீரியல் செட்டில் நடந்த சுவாரஸ்யம்..

அன்பே சிவம் சீரியல்

அன்பே சிவம் சீரியல்

Zee Ta,mil Serial: அன்பே சிவம் சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் ஸ்ரீ செய்த ஸ்டன்ட் ரொமான்ஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.

  • Share this:
அன்பே சிவம் சீரியல் செட்டில் அந்தர்பல்டி அடித்து நடிகை ஒருவருக்கு விக்ரம் ஸ்ரீ புரோஃபோஸ் செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.ஜீ தமிழ் தொலைகாட்சியில் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் ‘அன்பே சிவம்’ என்ற புத்தம்புது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகனாக ‘நல்ல சிவம்’ கதாப்பாத்திரத்தில் விக்ரம் ஸ்ரீ நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி, காற்றின் மொழி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் சீசனில் ஹீரோயினாக நடித்த ரக்ஷா ஹாலா ‘அன்பு செல்வி’ என்ற முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தக் கதையைப் பொறுத்த வரை, நல்ல சிவம் நேர்மையான வழக்கறிஞராக இருக்கிறார். அன்புச் செல்வி சிறந்த ஃபேஷன் டிசைனராக இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளும் இருவரும், ஒருகட்டத்தில் தங்களுக்கு இடையே எழும் முரண்பாடு காராணமாக விவாகரத்து பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த ஜோடிக்கு ஓவியா மற்றும் இனியா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இருவரில் ஓவியா அன்புச் செல்வியிடமும், இனியா நல்ல சிவத்திடமும் வளர்கின்றனர். அவர்களின் தாய் மற்றும் தந்தையை சந்திக்கும்போது, பெற்றோரிடம் மீண்டும் புரிதல் ஏற்பட்டு இணைகிறார்களா? என்பதே கதை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அன்பே சிவம் சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் ஸ்ரீ செய்த ஸ்டன்ட் ரொமான்ஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் நடிகையுடன் நடந்து வரும் விக்ரம் ஸ்ரீ, திடீரென தனது முன்னால் இருக்கும் கார் மீது தாவி, அப்படியே அந்தர்பல்டி அடித்து, தன்னுடன் வந்த நடிகைக்கு புரோஃபோஸ் செய்கிறார். அவரும் விக்ரம் ஸ்ரீயின் புரோஃபோசலை ஏற்றுக் கொள்கிறார். கியூட்டான இந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களின் மனங்களை கவர்ந்துள்ளது.


சீரியலை புரோமோட் செய்வதற்காக விக்ரம் ஸ்ரீ, இதுபோன்ற ஸ்டன்ட் செய்யும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டதா? அல்லது உண்மையிலேயே விளையாட்டாக செய்யப்பட்டபோது யாரேனும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்களா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் விக்ரம் ஸ்ரீயின் ஸ்டன்ட்டுடன் கூடிய ரொமான்ஸ் சூப்பராக இருக்கிறது.

also read : செம்ம மாடர்ன் உடையில் லண்டனை சுற்றி வரும் குஷ்பு - புகைப்படங்கள்

இந்த சீரியலில் நடிப்பது குறித்து அண்மையில் பேசியிருந்த விக்ரம் ஸ்ரீ, "நல்ல சிவம் கதாப்பாத்திரம் பொறுப்புகளுக்கும், ஆசைகளுக்கும் இடையில் சிக்கித் தவிர்க்கும் ஒரு கேரக்டர். பார்வையாளர்களுடன் எளிதில் கனெக்டாகும் ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும் என்பதால், நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். அன்பே சிவம் சீரியலில் கதாநாயகனாக நடிப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களின் வரவேற்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

ரக்ஷா ஹாலா பேசும்போது, " வெளியுலகுக்கு திடமான மற்றும் திறமையான பெண்ணாகத் தெரிந்தாலும், அன்புச் செல்வியின் இதயம் உண்மையில் நொறுங்கிப் போயிருக்கும். ஆனால், அதனை வெளியுலக்குக்கு ஒருபோதும் காட்டமாட்டாள். அம்மா, மனைவி, தொழிலதிபர், மகள் என அனைத்து நிலைகளையும் இந்த கதாப்பாத்திரம் கொண்டிருக்கிறது. இந்த சவாலான கதாப்பாத்திரத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சி செய்து வருகிறேன். ஒட்டுமொத்தமாக இந்த சீரியலில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: