• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆனந்த கண்ணன் திடீர் மறைவால் அதிர்ச்சியில் பிரபலங்கள் - இனி உன்னை பார்க்க முடியாதே என உருக்கம்!

ஆனந்த கண்ணன் திடீர் மறைவால் அதிர்ச்சியில் பிரபலங்கள் - இனி உன்னை பார்க்க முடியாதே என உருக்கம்!

விஜே ஆனந்த கண்ணன்

விஜே ஆனந்த கண்ணன்

விஜே ஆனந்த கண்ணனின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரபல ஆர்ஜே தீனா, "என் சிறந்த நண்பரும், சிறந்த மனிதருமான ஆனந்த கண்ணன் இனி இங்கில்லை.

  • Share this:
90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நிகிழ்ச்சி தொகுப்பாளரான ஆனந்த கண்ணனின் திடீர் மறைவு சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சிங்கப்பூரை சேர்ந்த தமிழரான ஆனந்த கண்ணன் தமிழகத்தில் பிரபல விஜே-வாகவும், நடிகராகவும் இருந்தவர். சில மாதங்களாக கடுமையான புற்றுநோயுடன் (பித்தப்பை புற்றுநோய்) போராடி வந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தார். தமிழக கிராமிய கலைகளை உலகம் முழுவதும் சென்று சேர்க்கும் அரிய பணியில் ஈடுபட்டிருந்த ஆனந்த கண்ணன் 48 வயதிலேயே மண்ணை விட்டு பிரிந்தது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு சினிமா துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 
View this post on Instagram

 

A post shared by Ramya NSK (@ramyansk)


இதனிடையே பிக் பாஸ் தமிழ் புகழ் ரம்யா என்.எஸ்.கே, ஆர்.ஜே.தீனா, ராகவேந்திரன் புலி, ப்ரீத்தி சஞ்சீவ் மற்றும் சில பிரபலங்கள் ஆனந்த கண்ணன் மறைவிற்கு தங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தத்தம் சோஷியல் மீடியாக்கள் மூலம் ஷேர் செய்துள்ளனர். ஆனந்த கண்ணன் பற்றி உணர்ச்சிபூர்வமான சில நினைவுகளை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார் ரம்யா என்.எஸ்.கே. "அவர் என் சகோதரர், தந்தை, வெல்விஷ்ஷர் அல்லது நண்பர்களை விட மேலாக இருந்தார்.

Also read... மேடை நாடகம், தெருக்கூத்து, பறையிசை... அறியப்படாத ஆனந்த கண்ணனின் மறுபக்கம்!

அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். எனது இன்பம் மற்றும் துன்பம் எதுவாக இருந்தாலும் அவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன். எப்படி வாழ வேண்டும், எப்படி நேசிக்க வேண்டும் என்பதை எனக்கு கற்று கொடுத்தவர். என கணவரை திருமணம் செய்வதற்கு முன் அவரிடம் அனுமதி பெற்றேன். ஒருமுறை என்னை பற்றி ஆனந்தாவிடம் பாரு பா என்று சிறிய புகார்களை என் அம்மா சொல்லிய போது, அவள் என் சகோதரி. அவள் அப்படி எல்லாம் செய்யமாட்டாள், அவளை பற்றி அப்படி சொல்லாதீர்கள் என்று சப்போர்ட் செய்தார்.

எப்போதும் எனக்காகவே நின்றார். அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மிகவும் நேர்மறையான ஆன்மா. அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார். இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் இனி உங்களை பார்க்க முடியாதே அண்ணா.. சொர்க்கத்தில் உங்களுக்காக சிறப்பான இடம் இருக்கும். நீங்கள் எப்போதும் என்னிடம் சொல்வது போல் "Love you more" .. RIP" உணர்ச்சிப்பூர்வமாக தனது சோகத்தை பகிர்ந்துள்ளார்.

 
View this post on Instagram

 

A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)


விஜே ஆனந்த கண்ணனின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரபல ஆர்ஜே தீனா, "என் சிறந்த நண்பரும், சிறந்த மனிதருமான ஆனந்த கண்ணன் இனி இங்கில்லை. இளம் வயதிலேயே நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவரது ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கு அதிக வலிமை கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்"என்று பதிவிட்டுள்ளார். ப்ரீத்தி சஞ்சீவ் தெரிவித்துள்ள இரங்களில் " ஏன் இவ்வளவு சீக்கிரமாக இவ்வுலகை விட்டு மறைந்து விட்டாய் கண்ணா!! என் அன்பு நண்பா, நீ ஒரு சிறந்த மற்றும் அன்பான இதயமுள்ள நபர். உன் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று கூறி இருக்கிறார்.

ஆர்ஜே விக்னேஷ்காந்த் தனது இன்ஸ்டாவில், " எதை நினைத்தும் தேற்றிக் கொள்ள முடியாத பேரிழப்பு. உங்களிடம் பயின்ற 90,000 மாணவர்களின் கலையில் உயிர்த்தே இருப்பீர்கள் அண்ணே....!! என்று கூறி இருக்கிறார். காற்றுக்கென்ன வேலி புகழ் ராகவேந்திரன் புலி ஷேர் செய்துள்ள இரங்கல் போஸ்ட்டில், " உங்கள் ஆன்மா இளைப்பாறட்டும் ஆனந்த கண்ணன் அண்ணா.. தமிழ் துறையில் எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளர்களில் ஒருவர்" என்று கூறி இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: