எமி ஜாக்சனின் தீவிர உடற்பயிற்சி: வீடியோ வெளியீடு

news18
Updated: August 10, 2018, 2:56 PM IST
எமி ஜாக்சனின் தீவிர உடற்பயிற்சி: வீடியோ வெளியீடு
எமி ஜாக்சன்
news18
Updated: August 10, 2018, 2:56 PM IST
நடிகை எமி ஜாக்சன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் லண்டனில் வசித்து வருகிறார். மதராசப்பட்டினம் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் தெறி, தனுஷின் தங்கமகன், விகரமுடன் ’ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்துள்ள எமி, சூப்பர் கேர்ள் என்ற இணைய தொடரிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கான கணக்கை துவங்கிய எமி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாளர் பிராட்லி சைமண்ட்ஸுடன் மீண்டும் பயிற்சியைத் துவங்கி விட்டதாக எமி ஜாக்சன் குறிப்பிட்டுள்ளார்.

First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...