700 எபிசோடுகளை கடந்த அம்மன் சீரியல் - கேக் வெட்டி கொண்டாட்டம்!

அம்மன்

அம்மன் சீரியல் 700 எபிசோடுகளை கடந்ததை சீரியல் குழுவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

  • Share this:
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தற்போது பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அந்த சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணி முதல் 8.30 வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது அம்மன் பக்தி சீரியல். தமிழ் டிவி சேனல்களில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கின்றனர்.

ரவி பிரியன் இயக்கத்தில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்த பக்தி சீரியலில் சக்தி என்ற முக்கிய கேரக்டரில் பவித்ரா கவுடா மற்றும் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடிகர் அமல்ஜித், ஷாரதாவாக ஜெனிபர், தாமோதரனாக ஹரிஷங்கர் நாராயணன், மந்த்ராவாக நடிகை சந்திரிகா, காந்தாரியாக சுபா ரக்ஷா என முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்து வருகின்றனர். அம்மன் தொடரின் கதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்ட ஒரு சிறிய நகரப் பெண்ணான சக்தியை சுற்றி நகர்கிறது. சமீபத்தில் 700 எபிசோட்களை கடந்த இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்மன் சீரியல் 700 எபிசோடுகளை கடந்ததை சீரியல் குழுவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் இதனை சாத்தியமாக்கிய அம்மன் சீரியல் ரசிகர்களின் அன்புக்கு நன்றி என நிஷா ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 700 எபிசோடுகளை கடந்ததை கொண்டாட முடிவெடுத்த சீரியல் குழுவினர் கேக் வெட்டி விழாவாக கொண்டாடியுள்ளனர். பவித்ரா அரவிந்த், அமல்ஜித், நிஷா, ஜெனிபர், ஹரிசங்கர், அழகப்பன் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். 
View this post on Instagram

 

A post shared by Harishankar Narayanan (@keeperharish)


இந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ள ஹரிசங்கர், “அம்மன் சீரியலின் முழு குழுவினருக்கும் ஒரு பெரிய வாழ்த்துக்கள், இந்த மைல்கல்லின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புதிய சாதனைக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த சீரியலில் காந்தாரியாக நடிக்கும் சுபா ரக்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சையில் சிக்கினார்.

Also read... ’விரைவில் என்னை பார்க்கலாம்’ - விஜய் டீவி புகழ் ‘புலிகேசி’ கொடுத்த அப்டேட்!

கன்னட சின்னத்திரையில் பாப்புலர் ஆன சுபா ரக்ஷா, தமிழில் அம்மன் சீரியல் மூலமாக அவர் அறிமுகம் ஆனார். சோசியல் மீடியாவில் தன்னுடைய செம்ம ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் சுபா ரக்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷேர் செய்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. அதில் ஆடை அணியாமல் வெறும் தொப்பியை வைத்து உடலை மறைத்து எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார். இதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
Published by:Vinothini Aandisamy
First published: