5-ஆம் வருட திருமண நாளை எளிமையாக கொண்டாடிய சின்னத்திரை காதல் ஜோடி.!

அமித்-ஸ்ரீரஞ்சனி

திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக அமித் பார்கவ் சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் சில மகிழ்ச்சியான ஃபோட்டோக்களை ஷேர் செய்து உள்ளார்.

 • Share this:
  சின்னத்திரை பிரபல ஜோடியான அமித் பார்கவ் -ஸ்ரீரஞ்சனி சுந்தரம் தம்பதி தங்களது 5-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். அமித் மற்றும் ஸ்ரீரஞ்சனி இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் மீதான அன்பை அவரவர் சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி உள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக பல இடங்களில் இன்னும் லாக்டவுன் தொடரும் நிலையில் அமித் மற்றும் ஸ்ரீரஞ்சனி இருவரும் தங்களது ஐந்தாவது திருமண நாளை மிக எளிமையாக குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடினர். திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக அமித் பார்கவ் சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் சில மகிழ்ச்சியான ஃபோட்டோக்களை ஷேர் செய்து உள்ளார். இந்த போஸ்ட்டில் தனது மனைவி ஸ்ரீரஞ்சனியை டேக் செய்துள்ளார்.

  அத்துடன் சில வரிகளில் காதல் குறிப்பு ஒன்றையும் தன் மனைவிக்காக கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். " நமக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. உங்களுடன் வாழ்வதும், நேசிப்பதும், சிரிப்பதும் என் வாழ்க்கையின் சிறந்த அனுபவமாகும். அடுத்த வாழ்கை , அடுத்து அடுத்து என இங்கே இன்னும் 500 ஆண்டுகள் நமக்காக இருகின்றன"என்று மனைவி ஸ்ரீரஞ்சனி மீதான அன்பை வெளிப்படுத்தி உள்ளார் அமித் பார்கவ்.

   
  தன் கணவர் அமித் பார்கவை போலவே ஸ்ரீரஞ்சனி தனது இன்ஸ்டா பக்கத்தில் சில மகிழ்ச்சியான ஃபோட்டோக்களை அமித்துடன் ஷேர் செய்து சில அன்பான வரிகளை கேப்ஷனாக எழுதி உள்ளார். "மகிழ்ச்சியுடன் இருப்பது எப்போதும் காதல் பற்றியது என்பதை நாம் கற்று கொண்டு உள்ளோம். ஆனால் ‘காதல்’ என்றால் என்ன என்பதை யாரும் உங்களுக்கு கற்பிக்கவில்லை . இது காலத்திலும் சோதனையிலும் நீங்கள் கற்று கொண்ட ஒன்று. காதலை மற்றும் அன்பை ஒன்றாக கண்டுபிடிப்பதில் நாம் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இனிய திருமணநாள் வாழ்த்துக்கள், என் அன்பே!! என்று கணவர் மீதான தன் அன்பை ஸ்ரீரஞ்சனி வெளிப்படுத்தி உள்ளார்.

   
  விஜய் டிவி-யில் 'கல்யாணம் முதல் காதல் வரை', 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் அமித் பார்கவ். விஜய் டிவி-யில் "கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஸ்ரீரஞ்சனி. இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மே 7, 2019 அன்று பெண் குழந்தை பிறந்தது. தங்கள் மக்களுக்கு வேத ஸ்ரீ பார்கவ் என்று பெயர் வைத்துள்ளனர். ‘திருமதி ஹிட்லர்’ நிகழ்ச்சியில் அபிநவ் ஜனார்த்தனன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அமித் பார்கவ் நடித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பகவான் கிருஷ்ணர் வேடத்தில் மகாபாரதத்தில் இடம் பெற்றிருந்தார். நடன அடிப்படையிலான ரியாலிட்டி ஷோவான ஜோடி நம்பர் ஒன்னில் தங்கள் நடன திறனை அமித் - ஸ்ரீரஞ்சனி ஜோடி நிரூபித்து உள்ளனர்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: