• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்று நட்ட அமிதாப்பச்சன்...!

கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்று நட்ட அமிதாப்பச்சன்...!

நடிகர் அமிதாப்பச்சன் உடன் நாகார்ஜுனா

நடிகர் அமிதாப்பச்சன் உடன் நாகார்ஜுனா

தெலங்கானா மாநிலங்களவை எம்பி சந்தோஷ் குமார் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கிரீன் இந்தியா சவாலை விடுத்திருந்தார். சவாலை ஏற்ற அமிதாப்பச்சன் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ஒரு மரக்கன்றை நட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தெலங்கானா மாநிலங்களவை எம்.பி. சந்தோஷ் குமார் விடுத்த கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் அமிதாப்பச்சன்.

சென்ற வருட ஊரடங்கின் போது தென்னிந்தியாவில் இந்த கிரீன் இந்தியா சவால் பரவியது. ஒருவர் மரக்கன்று நட்டு இன்னொருவரை மரக்கன்று நடும்படி கேட்க வேண்டும். இதுதான் கிரீன் இந்தியா சேலஞ்ச்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் ஒரு மரக்கன்று நட்டு நடிகர் விஜய்யை கிரீன் இந்தியா சவாலுக்கு அழைத்தார். சவாலை ஏற்று விஜய்யும் ஒரு மரக்கன்று நட்டார். இதேபோல் பல நட்சத்திரங்கள் மரக்கன்றுகள் நட்டனர்



தெலங்கானா மாநிலங்களவை எம்பி சந்தோஷ் குமார் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கிரீன் இந்தியா சவாலை விடுத்திருந்தார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தில் அமிதாப்பச்சனும் நடிக்கிறார்.

Also read... புதிதாக பிறந்த பெண் குழந்தையை இன்ஸ்டாவில் அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவி... ரசிகர்கள் வாழ்த்து!



இதற்காக அவர் தற்போது ஹைதராபாத்தில் தங்கியுள்ளார். சந்தோஷ் குமாரின் சவாலை ஏற்ற அவர் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ஒரு மரக்கன்றை நட்டார். இந்த நிகழ்வின் போது நடிகர் நாகார்ஜுனாவும் உடனிருந்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: