முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விபத்தில் சிக்கிய அமிதாப்பச்சன்.. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!

விபத்தில் சிக்கிய அமிதாப்பச்சன்.. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!

அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சன்

Amitabh Bachchan : பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அறியப்பட்டவர் அமிதாப்பச்சன்,  தற்போது தெலுங்கில் உருவாகும் Project K என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  பிரபாஸ் நடிக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் 'ப்ராஜெக்ட் கே' படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர்.  அந்த சண்டை காட்சியில் நடித்த அமிதாப்பச்சனுக்கு விபத்து ஏற்பட்டு அடிபட்டுள்ளது.

இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.  மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.  இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அவர் மும்பையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதுகுறித்து தன்னுடைய இணையதளத்திலும் அமிதாப்பச்சன் பதிவிட்டுள்ளார். ப்ராஜெக்ட் கே திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் உருவாகிறது.

First published:

Tags: Amithab bachchan