• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறேனா? கஸ்தூரி பதில்

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறேனா? கஸ்தூரி பதில்

பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை கஸ்தூரி பதிலளித்துள்ளார்.

  • Share this:
மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமித் ஷா தமிழகத்திற்கு முதல் முறையாக வருகை தர உள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், அமித் ஷாவின் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித் ஷா வருகையை அடுத்து மற்ற அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், திரை நட்சத்திரங்கள் என சிலர் அவர் முன்னிலையில் இணையலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதற்கு பதிலளித்திருக்கும் நடிகை கஸ்தூரி, “அமித் ஷா முன்னிலையில் இன்று நான் பாஜகவில் இணையப் போகிறேன் என்று எனது மொபைல் போன் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வதந்தி உண்மையை விட எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு மற்றொரு உதாரணம் தான் இது.நான் நேற்றுமாலை முருகனை சந்தித்தது உண்மைதான். ஆனால் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அல்ல. எனது குலதெய்வமான கடவுள் முருகன். நான் வேல்யாத்திரையில் கலந்து கொள்ளவில்லை. முருகனின் சூரசம்ஹார நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டேன்.

அப்போ கட்சியில சேர்கிறேன் என்ற செய்தி? இந்த பொய் எங்கு உருவாக்கப்பட்டது என்பதில்தான் சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.” என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் பாஜகவில் சேரவிருப்பதாக வெளியான தகவல்களுக்கு விடை கிடைத்துள்ளது.

அமித் ஷா சுற்றுப்பயண விவரம்

மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமித் ஷா தமிழகத்திற்கு முதல் முறையாக வருகை தர உள்ளார். இன்று (சனிக்கிழமை )காலை 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர், பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு தமிழக அரசு மற்றும் பாஜக கட்சி சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்படுகிறது.

அதன்பின், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலை சாலைமார்க்கமாக 1.55 மணிக்கு அடைகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித் ஷா, மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கலைவாணர் அரங்கம் வருகிறார். கலைவாணர் அரங்கில் 4.30 மணி முதல் 6 மணி வரை அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

அப்போது, 380 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார் 67 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம், சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்திய ஆயில் நிறுவன திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் படிக்க: Exclusive அணிகலன்கள் முதல் பப்பாளி சாகுபடி வரை சிறைவாசத்தில் சசிகலா செய்தவை

அதைத்தொடர்ந்து மீண்டும் லீலா பேலஸுக்கு வரும் அவர், மாலை 6.20 மணி முதல் பாஜக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பின் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சி, சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: