விஸ்வாசம்: ஆன்லைனில் வெளியிடலாமா? - அமேசானுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்

நடிகர் அஜித்

சிவா- அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக உருவான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  விஸ்வாசம் படம் குறித்து அமேசான் பிரைம் வெளியிட்ட ட்வீட்டுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  சிவா- அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக உருவான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு, ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடும்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலில் இதுவரை அஜித் படங்கள் செய்யாத சாதனையை பெற்றிருக்கும் இந்தப் படத்தின் டிஜிட்டல் ஃபிளாட் பார்ம் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது.

  இந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் படத்தை வெளியிடலாமா என்று கருத்து பதிவிட்டுள்ளது.  இதற்கு அஜித் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  மேலும் தற்போது ஆன்லைனில் படத்தை வெளியிட வேண்டாம் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

  அவதூறு பரப்பும் முன்னாள் காதலன் - நடிகை புகார் - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published: