விஜய் சேதுபதியின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருந்த அமலாபால் படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரோகாந்த் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார். அவருக்கு வில்லனாக தடம் பட இயக்குநர் மகிழ் திருமேனி நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 14-ம் தேதி பழனியில் தொடங்கியது. அங்கு விஜய் சேதுபதி - வில்லன் மோதும் காட்சிகளை படமாக்கிய படக்குழு, தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருந்த அமலாபால் தேதிகள் பிரச்னை காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தப் படத்தின் கதையில், சர்வதேச அளவிலான பிரச்னை பேசப்படவுள்ளது.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசாமி இசையமைக்கிறார்.
வீடியோ பார்க்க: நீட் தேர்வு - நடிகை ஜோதிகா கேள்வி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor vijay sethupathi, Actress Amala paul, Megha akash