Amala Paul: அமலா பால் நடிக்கும் டைம் லூப் வெப் சீரிஸ்...!

நடிகை அமலா பால்

அமலா பால் நடிப்பில் தமிழில், அதோ அந்தப் பறவை போல, காடவர் படங்களும், மலையாளத்தில் ஆடுஜீவிதம் படமும் வெளிவர உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். நடிகைகளில் சமந்தா, தமன்னா எனப் பலரும் வெப் சீரிஸில் நடித்திருக்க, அமலா பால் நடித்துள்ள வெப் சீரிஸ் ஒன்றும் விரைவில் வெளியாக உள்ளது.

லூசியா, யு டர்ன் போன்ற விருது பெற்ற படங்களை இயக்கியவர் கன்னட இயக்குநர் பவன் குமார். இவர் டைம் லூபை அடிப்படையாகக் கொண்டு இயக்கியிருக்கும் வெப் தொடர் ’குடி யெடமைதே’. டைம் லூப் என்பது குறிப்பிட்ட நேர இடைவெளியில் முன்பு ஏற்பட்ட அதே அனுபவத்தைக் கதாபாத்திரங்கள் மீண்டும் அனுபவப்படுவது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதாவது காலச் சுழலுக்குள் சிக்கி மறுபடி மறுபடி ஒரே அனுபவத்தை எதிர்கொள்வது. டைம் லூபை அடிப்படையாக வைத்து சோர்ஸ் கோட், ப்ரீடெஸ்டினேஷன், லூப்பர், எட்ஜ் ஆஃப் டுமாரோ உள்பட ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் சொற்பமாகவே வெளிவந்துள்ளன. அந்த வகையில் இது புது முயற்சி.

Also read... Arun Vijay: திரையரங்கில் வெளியாகும் சினம் - அருண் விஜய் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்த வெப் சீரிஸ் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் அமலா பால் போலீஸ் அதிகாரியாகவும், ராகுல் விஜய் டெலிவரி பாயாகவும் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் தான் பிரதான கதாபாத்திரங்கள். இவர்களைச் சுற்றி கதைப் பின்னப்பட்டுள்ளது. நேற்று இதன் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். குடி யெடமைதே யின் கதையை ராம் விக்னேஷ் எழுதியுள்ளார்.

அமலா பால் நடிப்பில் தமிழில், அதோ அந்தப் பறவை போல, காடவர் படங்களும், மலையாளத்தில் ஆடுஜீவிதம் படமும் வெளிவர உள்ளன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: