முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றியைக்கூட கொண்டாட முடியவில்லை - 96 படத்தின் இயக்குனர் வேதனை!

வெற்றியைக்கூட கொண்டாட முடியவில்லை - 96 படத்தின் இயக்குனர் வேதனை!

பிரேம்குமார் (மைக்கில் பேசுபவர்)

பிரேம்குமார் (மைக்கில் பேசுபவர்)

96 படம் வெற்றி பெற்றதால்தான் அதன் கதைக்கு உரிமை கொண்டாடப்படுவதாக அந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமார் கூறினார்.

  • 1-MIN READ
  • Last Updated :

96 படத்தின் வெற்றியைக்கூட கொண்டாட முடியாத அளவுக்கு தான் மன உளைச்சலில் இருப்பதாக அந்தப் படத்தின் இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தின் கதை தான் எழுதியது என சுரேஷ் என்பவர் கூறியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் 96 படத்தின் கதை தான் எழுதி பாரதிராஜா இயக்க இருந்த  ‘பால்பாண்டி என்கின்ற பாரதி’ படத்தின் கதை என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குனர் பிரேம், 96 படம் வெற்றி பெற்றதால்தான் அதன் கதைக்கு உரிமை கொண்டாடப்படுவதாகக் கூறினார்.

பாரதிராஜா தம்மை சமூக வலைதளத்தில் கொச்சையாக திட்டியதாகக் கூறிய பிரேம் குமார், எந்த ஆதாரமும் இல்லாமல் தன்னை திட்டியது தவறு என்றும், இதற்கு அவர் சரியான விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Also watch

First published:

Tags: 96 movie