பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை ஜாதி மதம் கொண்டு திசை திருப்ப வேண்டாம் என பாடகி சின்மயி வலியுறுத்தியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து வைரமுத்துவுக்கு கிடைத்த ONV விருதுக்கு எதிராக மலையாள நடிகை பார்வதி ட்வீட் செய்ய அவருக்கு கொடுக்கப்படும் இருந்த விருதை மறுபரிசீலனை செய்வோம் என்று விருதுக்குழு அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஒவ்வொரு முறை ஏதேனும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு வரும்பொழுதும் சின்மயி வைரமுத்து பிரச்சினையை கொண்டுவந்து அதனை திசை திருப்புவதாக குற்றம் சாட்டு எழுந்தது.
Read More:
சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்
இதுகுறித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அரை மணிநேர வீடியோ ஒன்றை பாடகி சின்மயி பகிர்ந்திருக்கிறார். அதில் பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் தன்னுடைய பங்கு குறித்தும் வைரமுத்து மீதான குற்றச்சாட்டுக்கு காலம் தாழ்த்தியது குறித்தும், பல ஆண்டுகள் கழித்து குற்றம்சாட்டப்பட்ட தான் காவல் நிலையத்திற்கு செல்ல முடியாதது குறித்தும் பேசியிருக்கிறார்.
Read More:
தலைமைச் செயலாளர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு செக் வைத்தாரா மம்தா பானர்ஜி?
இறுதியாக எந்த ஒரு பாலியல் குற்றச்சாட்டாக இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் அதனை திசை திருப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தி பேசியிருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.