ஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்

ஆல்யா, சஞ்சீவ்

விஜய் டிவி புகழ் நடிகை ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடி தங்களது திருமணம் குறித்த ரகசியத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியல் செம்பாவாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளார். தற்போது விஜய் டிவியில் இரவு நேரத்தில் 9.30-க்கு ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2-வில், சந்தியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் அடிப்படையில் ஒரு டான்ஸர் ஆவார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட(சீசன் 10) நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். ஏராளமான விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டாலும் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் வெற்றிகரமாக பேலன்ஸ் செய்து வருகிறார்.

  ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்தார். இதனை அடுத்து சின்னத்திரையில் ரசிகர்கள் பெரிதும் விரும்பிய கார்த்தி - செம்பா ஜோடியாக இருந்த இவர்கள், நிஜ வாழ்வில் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியாகி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது அய்லா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது.

  குழந்தை பிறந்தவுடன் சில நாட்கள் ஓய்வில் இருந்த ஆல்யா மானசா, ராஜா ராணி 2 மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார். சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, தனது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது வீடியோ, புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

  மேலும் யூடியூபிலும் சஞ்சீவ்&ஆல்யா என்ற பெயரில் சேனல் ஆரம்பித்துள்ளனர். இந்த சேனலை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாலோ செய்கின்றனர். இதில் ஆல்யா குழந்தையின் முதல் பிறந்த நாள், விளையாட்டு தனமான வீடியோக்களை ஃபாலோயர்ஸ்களுடன் ஷேர் செய்து கொள்வார்.

  இந்த நிலையில் நம்ம வீட்டு கல்யாணம் என்ற பெயரில் ஒரு வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளனர். அதில் தங்களது திருமணம் எப்படி நடந்தது என்ற தகவலை கூறியுள்ளனர். ஆல்யா பிறந்தநாள் அன்று அன்று சர்ப்பரைஸாக ஈசிஆர் உள்ள கோவிலுக்கு அழைத்து போய் தாலி கட்டியுள்ளார் சஞ்சீவ். திருமணம் செய்துகொண்ட பிறகு ஆல்யா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் ஆல்யா குடும்பத்தினர் ஏற்றுகொள்ளாததால் மிகவும் கஷ்டப்பட்டு ஓகே வாங்கியதாக சஞ்சீவ் கூறுகிறார். அப்போது குறுக்கிட்ட ஆல்யா, என்ன நடந்தாலும் சஞ்சீவி மிஸ் செய்து விடக்கூடாது என நான் உறுதியாக இருந்தேன். திருமணத்திற்கு பின்னர் நான் சரியான முடிவு எடுத்தாக உணர்ந்ததாக மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

  பின்னர் சஞ்சீவ் வீட்டில் சிம்பிளாக அவரது முறைப்படி திருமணம் நடைபெற்றதாகவும், பின்னர் கிராண்ட்டாக ரிசப்ஷன் நடந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் ரிசப்ஷன் நடந்த வீடியோவையும் இணைந்துள்ளனர். அதில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னதாக ஆல்யா, "பழையதை எதிர்த்து போராடுவதில் உங்கள் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தாமல், புதிய ஒன்றை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்" என்ற கேப்ஷனுடன் யார் உதவியும் இன்றி தனியாக தான் பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். அந்த வீடியோவும் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.
  Published by:Karthick S
  First published: