Home /News /entertainment /

கர்ப்ப காலத்தை ஆனந்தமாகக் கொண்டாடும் நடிகை ஆலியா மானசா!

கர்ப்ப காலத்தை ஆனந்தமாகக் கொண்டாடும் நடிகை ஆலியா மானசா!

Alya Manasa

Alya Manasa

Alya Manasa | மிக குறுகிய காலத்திலேயே ஆல்யா மானசா தனது சிறப்பான நடிப்பின் மூலம் மக்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார். இதன் மூலம் விஜய் டிவியின் டாப் நடிகைகளில் ஒருவராகவும் இடம் பிடித்து விட்டார். ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திலும் ஆல்யா மானஸா நடித்து வருகின்றார்.

மேலும் படிக்கவும் ...
விஜய் டிவியில் பல விதமான தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் என மக்களுக்கு பொழுதுபோக்கு தரக்கூடிய எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. அதே போன்று இவற்றில் நடித்து வரும் பலர், விஜய் டிவியில் சேர்ந்த சில காலங்களிலேயே மிகவும் பிரபலமாகி விடுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக சீரியல்களில் நடிக்க கூடிய நடிகர்கள் விரைவில் மக்களின் மனதில் இடம் பெற்று விடுவார்கள். இதன் மூலம் மிகவும் பரீட்சயமான நபராக மாறிவிடுவார்கள்.

முழுக்க முழுக்க அவர்களின் திறமையை கொண்டு பெரிய உயரத்தையும் அடைந்து விடுவார்கள். அதே போன்று இதன் மூலம் பல சினிமா வாய்ப்புகளையும் பெற்று விடுகின்றனர். விஜய் டிவி மூலம் சினி உலகில் பெரிய உச்சத்தை அடைவதோடு தனக்கான சிறந்த வாழ்க்கை துணையையும் சிலர் கண்டறிந்து விடுவார்கள். அந்த வகையில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடியை குறிப்பிட்டு சொல்லலாம்.

இவர்கள் தொடக்கத்தில் விஜய் டிவியின் பிரபல தொடரான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார்கள். அதன் பிறகு இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இப்படியே சில ஆண்டுகள் செல்ல, ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ராஜா ராணி சீரியலை பலரும் விரும்பி பார்த்ததற்கு முக்கிய காரணமே இருவரின் கதாபாத்திரம் தான்.

மிக குறுகிய காலத்திலேயே ஆல்யா மானசா தனது சிறப்பான நடிப்பின் மூலம் மக்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார். இதன் மூலம் விஜய் டிவியின் டாப் நடிகைகளில் ஒருவராகவும் இடம் பிடித்து விட்டார். ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திலும் ஆல்யா மானஸா நடித்து வருகின்றார். தற்போது ராஜா ராணி-2 தொடரில் பல விறுவிறுப்பான திருப்பங்கள் வரவுள்ளது. சந்தியாவின் ஐஏஎஸ் கனவு பற்றி சரவணனுக்கு தெரிய வந்துள்ளது. எனவே சந்தியாவை எப்படியாவது ஐஏஎஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று சரவணன் தனது அம்மாவிடம் போராடி வருகிறார்.

Also Read : பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் காதலி அமிர்தா யார் தெரியுமா ?

மேலும் இதை தொடர்ந்து பல சுவாரஸ்யமான திருப்பங்களும் வரவுள்ளது. விஜய் டிவியை தொடர்ந்து இவருக்கு சமூக ஊடகங்களிலும் பல ரசிகர்கள் உண்டு. இவர்கள் இருவரும் யூடியூபில் தங்களுக்கென்று ஒரு சேனல் வைத்துள்ளனர். அதில் அவ்வப்போது பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சேனலுக்கு பல லட்சம் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதாக யூடியூபில் வீடியோ மூலம் வெளிப்படுத்தினார். இவருக்கு ஐலா என்கிற பெண் குழந்தையும் உள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by alya_manasa (@alya_manasa)






இவர் அடிக்கடி ஐலாவுடன் விளையாட கூடிய பல வீடியோக்களை பதிவேற்றுவார். அந்த வகையில், தனது மகள் ஐலாவுடன் நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருக்கும் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது மக்களுக்கு இன்னும் 2 நாட்களில் பிறந்தநாள் வரவுள்ளதாக அதில் ஆலியா குறிப்பிட்டுள்ளார். எனவே ரசிகர்கள் ஆலியாவின் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Alya Manasa, TV actress

அடுத்த செய்தி