HOME»NEWS»ENTERTAINMENT»alya manasa husband sanjeev karthick surprise visit to raja rani 2 set msb

‘ராஜா ராணி 2’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஆல்யாவின் கணவர் சர்ப்ரைஸ் விசிட்

ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.

‘ராஜா ராணி 2’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஆல்யாவின் கணவர் சர்ப்ரைஸ் விசிட்
ராஜா ராணி 2
  • Share this:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியல் மூலம் ஆல்யா மானஷா - சஞ்சீவ் ஜோடி பிரபலமானது. இந்த தொடரின் மூலம் இவர்களுக்கு மிகவும் பிரபலமான சீரியல் ஜோடிகள் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சீரியலைத் தாண்டி நிஜத்திலும் காதல் திருமணம் செய்து கொண்ட ஆல்யா - சஞ்சீவ் ஜோடிக்கு ஐலா சையத் என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது. குழந்தை பிறந்த பின் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக வந்த ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார். இத்தொடரில் அவருக்கு ஜோடியாக திருமணம் தொடரின் நடிகர் சித்து நடிக்கிறார். இத்தொடர் சீரியல் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எதிர்பாராதவிதமாக வந்த ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் சித்துவுடன் ஜாலியாக பேசி மகிழ்ந்துள்ளார். அதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.





தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்திருக்கும் நிலையில் ராஜா ராணி 2 சீரியல் 9.30 மணி முதல் 10.30 மணி வரை 1 மணி நேர தொடராக ஒளிபரப்பாகும் என விஜய் டிவி சமீபத்தில் அறிவித்தது.10.30 மணிக்கு தேன்மொழி சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: