விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ஆல்யா மானசா. இவரது உண்மையான பெயரை சொன்னால் கூட இன்னும் பலருக்கு தெரியாது ஆனால் செம்பா என்றால் பலரும் சட்டென்று ஓ ராஜா ராணி சீரியலில் நடித்தவரா என்று கேட்பார்கள்.அந்த அளவிற்கு ராஜா ராணி சீரியல் செம்பாவாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளார். தற்போது விஜய் டிவி-யில் இரவு நேரத்தில் 9.30-க்கு ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2-வில், சந்தியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
1992-ஆம் ஆண்டு மே மாதம் பிறந்த இவர், அடிப்படையில் ஒரு டான்ஸர் ஆவார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட(சீசன் 10) நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். ஏராளமான விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டாலும் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் வெற்றிகரமாக பேலன்ஸ் செய்து வருகிறார். ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்தார். இதனை அடுத்து சின்னத்திரையில் ரசிகர்கள் பெரிதும் விரும்பிய கார்த்தி - செம்பா ஜோடியாக இருந்த இவர்கள், நிஜ வாழ்வில் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியாகி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தற்போது அய்லா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தவுடன் சில நாட்கள் ஓய்வில் இருந்த ஆல்யா மானசா, ராஜா ராணி 2 மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார். சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் ஆல்யா. குழந்தையின் முதல் பிறந்த நாள் முதல் பல மகிழ்ச்சியூடடும் விஷயங்களை தனது ஃபாலோயர்ஸ்களுடன் ஷேர் செய்து கொள்வார்.
Also Read: நடிகர் சோனு சூட்டை சந்திக்க ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு நடந்தே சென்ற ரசிகர்!
அந்த வகையில் இன்ஸ்டாவில் சுமார் 3.4 மில்லியன் ஃபாலோயர்ஸ் வைத்துள்ள நடிகை ஆல்யா மானசா, "பழையதை எதிர்த்து போராடுவதில் உங்கள் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தாமல், புதிய ஒன்றை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்" என்ற கேப்ஷனுடன் யார் உதவியும் இன்றி தனியாக தான் பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
View this post on Instagram
ஆல்யாவின் பைக் ஓட்டும் முயற்சியை பாராட்டியுள்ள அவரது ரசிகர்கள் குறிப்பிட்ட வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். ஆல்யா பைக் ஓட்டும் வீடியோ பலரால் ரசிக்கப்பட்டு, ஷேர் செய்யப்பட்டு வருவதால் வைரலாகி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alya Manasa, Yamaha bike