Home /News /entertainment /

நிறைமாத கர்ப்பத்திலும் இப்படியா? ரசிகர்களின் பாராட்டு மழையில் ஆல்யா மானசா!

நிறைமாத கர்ப்பத்திலும் இப்படியா? ரசிகர்களின் பாராட்டு மழையில் ஆல்யா மானசா!

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

சோசியல் மீடியாவில் கூட அவ்வப்போது ஆல்யாவின் உடல் எடை குறித்து கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ராஜா ராணி’ ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்ததுள்ளது. அதற்கு காரணம் ஆல்யா மானசா, சஞ்சீவ் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் 2017-ம் ஆண்டு விஜய் டி.வி.யில் ராஜா ராணி சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. செண்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா மானசாவும், கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவும் நடித்திருந்தனர். சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் இருவரது ரொமான்ஸ் ஒர்க்அவுட் ஆக ரீல் காதல் ரியல் காதலாக மாறியது.

  இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, 2019 ஆம் ஆண்டு யாருக்குமே தெரியாமல் ஆல்யா மனசாவின் பிறந்தநாள் அன்று இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ராஜா ராணி சீரியல் நிறைவடையவிருந்த சமயத்தில் ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி தங்களது முதல் குழந்தையை வரவேற்க தயாராகினர். சீரியல் முடிவுக்கு வந்த கையோடு ஆல்யா மானசா அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார், அதற்கு ஐலா என பெயர் சூட்டியுள்ளனர்.

  முதல் குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை கடுமையாக கூடியதை அடுத்து பல மாதங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்த ஆல்யா மானசா, மீண்டும் பழைய ஸ்லிம் லுக்கிற்கு திரும்பினார். தற்போது ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார். ராஜா, ராணி முதல் சீசனைப் போலவே, இரண்டாவது சீசனிலும் கதாபாத்திரங்களும், நடிகர்களும் அதற்கு நல்ல வலுசேர்த்திருக்கிறார்கள்.

  சந்தியா என்ற கேரக்டரில் ஆல்யா நடித்து வருகிறார். ஹீரோவாக நடிகர் சித்து, சரவணன் என்ற கேரக்டரில் சந்தியாவின் கணவராக நடித்து வருகிறார். ஒரு நல்ல ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என லட்சிய கனவோடு இருக்கும் ஹீரோயின் சந்தியா, எதிர்பாராதவிதமாக சரவணனை திருமணம் செய்து கொள்கிறார், அதற்கு பின்னர் குடும்பத்தில் வெடிக்கும் குழப்பங்கள், சண்டைகள் தான் கதைக்களம். ஆரம்பத்தில் மெதுவாக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி சீசன் 2 தற்போது விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

  இது தான் விஜய்யின் சொகுசு பங்களாவா? கவனம் பெறும் புகைப்படம்!

  இந்நிலையில் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இதனால் அவர் சீரியலில் இருந்து விலக உள்ளதாக கூட வதந்திகள் வெளியாகின. ஆனால் இப்போது வரை நிறைமாத கர்ப்பிணியான ஆல்யா மானசா தான் சீரியலில் நடித்து வருகிறார். ராஜா ராஜா சீசன் 2 ஆரம்பித்த புதிதில் ஸ்லிம் ஆக இருந்த ஆல்யா, தற்போது கர்ப்பம் காரணமாக உடல் எடை கூடிவிட்டார். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார்.

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரியும்... மேடை நாடக நடிகர் ரஜினி தெரியுமா?

  சோசியல் மீடியாவில் கூட அவ்வப்போது ஆல்யாவின் உடல் எடை குறித்து கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஆல்யா, தனது குழந்தையின் வளர்ச்சி மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சீரியலில் முடிந்த அளவிற்கு தனது காஸ்ட்டியூம் மூலமாக உடல் எடையை அட்ஜெஸ்ட் செய்து நடித்து வருகிறார். கர்ப்ப காலத்தில் டயட், உடற் பயிற்சி போன்ற தேவையில்லாத ரிஸ்க்கை எல்லாம் எடுக்க விரும்பாத ஆல்யா, குழந்தையின் ஆரோக்கியத்தையும், அதே சமயத்தில் தனது கேரியரில் எவ்வித சிக்கலும் இல்லாமலும் பேலன்ஸாக கொண்டு செல்கிறார். இதற்காக ஆல்யா மானசாவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாராட்டி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Alya Manasa, Vijay tv

  அடுத்த செய்தி