முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி சொன்ன சீரியல் நடிகை ஆல்யா மானசா

இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி சொன்ன சீரியல் நடிகை ஆல்யா மானசா

alya manasa

alya manasa

Alya Manasa | ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடிக்கடி யூடியூபில் பல வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஆகியவற்றில் நடித்து வரும் பலரும் மிக குறுகிய காலத்திலேயே பெரிய பிரபலமாக உருவெடுத்து விடுகின்றனர். அவர்களின் திறமை ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் புகழ்பெற்று விடுகின்றனர். அந்த வகையில் சாதாரண சீரியல் நடிகர்களாக நடித்தவர்கள் கூட, இன்று மிக பெரிய உயரத்தை சினிமா உலகில் அடைந்துள்ளனர். இப்படி விஜய் டிவியில் இருந்து பலர் பெரிய உச்சத்தை அடைத்துள்ளனர்.

இந்த வரிசையில் விஜய் டிவியில் நடித்து பலரும் காதல் ஜோடியாக மாறி திருமண பந்தத்தை ஏற்றுள்ளனர். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆல்யா மானசா- சஞ்சீவ் ஜோடியை சிறந்த உதாரணமாக சொல்லலாம். இவர்கள் இருவரும் ராஜா ராணி தொடரின் முதல் பாகத்தில் முன்னணி கதாபத்திரத்தில் நடித்து வந்தனர். மிக குறுகிய காலத்தில் ஆல்யா மக்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார். அவரின் சிறப்பான நடிப்பின் மூலம் விஜய் டிவியில் உள்ள டாப் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அதே போன்று சமூக வலைத்தளங்களிலும் ஆல்யாவிற்கு அதிக ஃபாலோவர்ஸ் உள்ளனர். ஆல்யாவை போன்றே சஞ்சீவ்வும் ராஜா ராணி சீரியலின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார். சைத்ரா ரெட்டி உடன் இவர் தற்போது நடித்து வரும் கயல் சீரியல் தான் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஆல்யா மானஸா தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். தற்போது ராஜா ராணி தொடரில் விறுவிறுப்பான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. தனது ஐஏஎஸ் கனவு பற்றி சரவணனுக்கு தெரிய வருவது போலவும், அதற்காக சந்தியாவை வெளியூருக்கு படிக்க அனுப்புவது போலவும் அடுத்தடுத்த காட்சிகள் வரவுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் என்கிற செய்தி வெளியானது. இந்நிலையில் விரைவில் அவர் சீரியல் நடிப்பதில் இருந்து விடுப்பு எடுத்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இவருக்கு முதல் குழந்தையாக ஐலா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

Also Read : நம்பிக்கையை விதைக்கும் தமிழ் சினிமாவின் புதிய பாதை!

இந்நிலையில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடிக்கடி யூடியூபில் பல வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இவர்கள் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் தங்கள் முதல் குழந்தை ஐலாவின் பிறந்தநாள் வரும் மார்ச் 20 ஆம் தேதி கொண்டாட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் மார்ச் 24 ஆம் தேதி அன்றுஆல்யாவுக்கு பிரசவ தேதி கொடுத்திருப்பதாக கூறியுள்ளனர். எனவே 20 ஆம் தேதி தனது மகள் பிறந்தநாள் மட்டுமின்றி தனக்கும் வளைகாப்பு நடத்த உள்ளதாக அதில் கூறி உள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்துள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதோடு, பல சின்னத்திரை பிரபலங்கள் ஆல்யாவிற்கும் சஞ்சீவிற்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போன்று ஆல்யாவின் ரசிகர்களும் அவர்களது வாழ்த்துக்களை கமெண்ட்ஸ் மூலம் கூறி வருகின்றனர்.

First published:

Tags: Alya Manasa, Entertainment