• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்...!

தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்...!

புஷ்பா ஃபர்ஸ்ட் லுக்

புஷ்பா ஃபர்ஸ்ட் லுக்

  • Share this:
    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நடிகர் அல்லு அர்ஜுன் - சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு புஷ்பா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரங்கஸ்தலம் என்ற வெற்றிப் படத்துக்குப் பின்னர் சுகுமார் இயக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்தப் படத்துக்காக அல்லு அர்ஜுன் தன்னை தயார்படுத்தி வரும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவு செய்கிறார்.



    மேலும் படிக்க: கொரோனா : 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை திரைத்துறையில் நஷ்டம்?



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: