• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சென்னையில் பிறந்தவர்.. 10 வயதில் தேசிய விருது... மறைந்த புனித் ராஜ்குமாரின் சினிமா குடும்ப பின்னணி!

சென்னையில் பிறந்தவர்.. 10 வயதில் தேசிய விருது... மறைந்த புனித் ராஜ்குமாரின் சினிமா குடும்ப பின்னணி!

Actor Puneeth rajkumar

Actor Puneeth rajkumar

மறைந்த புனித் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 10 வயதில் தேசிய விருதும், அடுத்தடுத்து இரண்டு மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

  • Share this:
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய 46 வயதே ஆன புனித் ராஜ்குமார், திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து, திரைத்துறையினர், ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திச் சென்றுவிட்டார்.

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று காலை 11.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட, பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில், மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஐசியூவில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இன்று (அக் 29) மதியம் காலமானார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

சென்னை வாழ்க்கை:

நடிகர்கள் ராஜ்குமார் மற்றும் பர்வதம்மா தம்பதியருக்கு 5வது மகனாக சென்னையில் பிறந்த புனித் ராஜ்குமாருக்கு முதலில் லோகித் என பெயர் வைத்தனர். இவர் தான் வீட்டின் கடைக்குட்டி. 6 வயதாக இருக்கும் போது இவர்களின் குடும்பம் சென்னையில் இருந்து மைசூருக்கு சென்றது. ராகவேந்திர ராஜ்குமார், சிவ ராஜ்குமார் என இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள், அதே போல லக்‌ஷ்மி, பூர்னிமா என இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

Also read: மறைந்தார் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் – ரசிகர்கள் கண்ணீர்..

புனித் ராஜ்குமார் திடீரென சினிமாவுக்கு வரவில்லை. 6 வயதாக இருக்கும் போதே நடிகர்களான தந்தை மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து சினிமா செட்களுக்கு செல்வார். அவருடைய தந்தை ராஜ்குமாருடன் 6 வயதாக இருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா கேரியரை தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 10 வயதில் தேசிய விருதும், அடுத்தடுத்து இரண்டு மாநில விருதுகளையும் வென்றுள்ளார். 14 வயது முடிவதற்குள் 14 படங்களில் நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரம் ஹீரோவானார்..

2002ம் ஆண்டு ‘அப்பு’ என்ற படத்தில் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் அவரை செல்லம்மாக அப்பு என்றே அழைக்கத்தொடங்கினர். பின்னர் தனது நடிப்பாற்றலால் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தனக்கான இடத்தை பிடித்தார். சொல்லப்போனால் அவரின் மூத்த சகோதரர்களைக் காட்டிலும் அவரின் பாப்புலாரிட்டி கூடியது.

Also read:  ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடே இப்படிப்பட்டவரா? – சக NCB அதிகாரி கூறும் உண்மைகள்!

நடிகர், தயாரிப்பாளர் என்பதையும் கடந்து அவரின் தந்தை போல புனித் ராஜ்குமார் ஒரு நல்ல மனிதராகவும் திகழ்ந்தார். ஒவ்வொரு வருடமும் தவறாமல் தனது பிறந்த நாளன்று (மார்ச் 17) ரசிகர்களை நேரில் சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தற்போது அவரின் மறைவு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையைச் சேர்ந்தவர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: