• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கோவாவில் கால்பந்து போட்டிகளைக் கண்டு ரசித்த ஆலியா பட், ரன்பீர் கபூர்.. வைரல் புகைப்படங்கள்

கோவாவில் கால்பந்து போட்டிகளைக் கண்டு ரசித்த ஆலியா பட், ரன்பீர் கபூர்.. வைரல் புகைப்படங்கள்

கோவாவில் கால்பந்து போட்டிகளைக் கண்டு ரசித்த ஆலியா பட், ரன்பீர் கபூர்.

கோவாவில் கால்பந்து போட்டிகளைக் கண்டு ரசித்த ஆலியா பட், ரன்பீர் கபூர்.

ஆலியா பட், ரன்பீர் கபூர் ஆகிய இருவரும் கோவாவில் கால்பந்து போட்டிகளைக் கண்டு ரசித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

  • Share this:
7வது இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து போட்டித் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. 11 அணிகள் இந்த போட்டித்தொடரில் பங்கேற்றுள்ளன. இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கோவாவின் ஜிஎம்சி ஸ்டேடியத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கு எதிராக மும்பை சிட்டி எஃப்சிக்கான போட்டியைக் காண காதல் பறவைகளான ஆலியா பட், ரன்பீர் கபூர் ஆகியோர் வந்திருந்தனர். மும்பை சிட்டி எஃப்சியின் அதிகாரப்பூர்வ பக்கம், இந்த இருவர், தங்கள் அணியை உற்சாகப்படுத்தும் இரு படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளது.

மும்பை சிட்டி எஃப்சியின் நீல நிற ஜெர்சியை ரன்பீரும், ஆலியா மஞ்சள் ஜெர்சியையும் அணிந்திருந்து அணியை உற்சாகப்படுத்தினர். கோவிட் -19 தொற்று பரவல் காரணமாக அவர்கள் இருவரும் மாஸ்க் அணிந்திருப்பதை படத்தில் காணலாம்.



 




View this post on Instagram





 

A post shared by Mumbai City FC (@mumbaicityfc)





மும்பை சிட்டி எஃப்சி அணியின் உரிமையாளராக ரன்பீர் உள்ளார். போட்டிக்குச் செல்வதற்கு முன், ஆலியாவுடன் ஒரு செல்ஃபியை அவர் எடுத்துக்கொண்டார், அதில் ஆலியா அணியின் மஞ்சள் ஜெர்சியை அணிந்திருப்பதைக் காணலாம். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'கேம் டைம்' மற்றும் 'ஆம்ச்சி சிட்டி' என்று எழுதியிருந்தார்.

இந்த ஜோடியின் படங்களைக் கண்ட ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் இந்த இருவரை 'காதல் பறவைகள்' என்று கூறியுள்ளார். இன்னொருவர் இவர்கள் இருவரை ஒன்றாகப் பார்க்க அற்புதமாக உள்ளதாகக் கூறியுள்ளார். ஹார்ட் எமோஜியை பல ரசிகர்கள் இந்த இருவருக்கும் பகிர்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.





மும்பை சிட்டி எஃப்சிக்கும் ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கும் இடையிலான ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலையில் நிறைவு செய்தனர். ஆலியாவும், ரன்பீரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வெளியே சென்று வர இருப்பதாக கூறப்படுகிறது. அமிதாப் பச்சன், நாகார்ஜுனா அக்கினேனி, மவுனி ராய் மற்றும் பிரதீக் பப்பர் (Amitabh Bachchan, Nagarjuna Akkineni, Mouni Roy and Prateik Babbar) ஆகியோர் நடிக்கும் அயன் முகர்ஜியின் பிரம்மஸ்திரா (Brahmastra) என்ற படத்திலும் இவர்கள் இருவரும் ஒன்றாக தோன்றுவார்கள். படம் மூன்று மொழிகளும் தொகுப்பாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் படத்தின் முதல் பாகத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: