கார் ஓட்டுநருக்கு 50 லட்சத்தில் வீடு வாங்கிக் கொடுத்த பிரபல நடிகை

சமீபத்தில் ஆலியா 13 கோடியில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கார் ஓட்டுநருக்கு 50 லட்சத்தில் வீடு வாங்கிக் கொடுத்த பிரபல நடிகை
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: March 20, 2019, 10:26 PM IST
  • Share this:
தன் அசாத்திய நடிப்பால் பாலிவுட்டில் ஆலியா பாட் எப்போதும் தனக்கென தனி ரசிகர் கூட்டம் வைத்திருப்பார். சமீபத்தில் அவர் நடித்த குல்லி பாய் படத்திலும் அவரின் நடிப்பு தனித்துவமானது. அவரின் நடிப்பைப் போலவே அவரின் உதவும் மனமும் ஈடுசெய்ய முடியாதது.

ஆம், தன்னிடம் பல வருடங்களாக பணிபுரியும் கார் ஓட்டுநரின் கனவு வீட்டை வாங்க 50 இலட்சம் கொடுத்திருக்கிறார் ஆலியா.

இந்துஸ்தான் பத்திரிகையில் குறிப்பிட்டது படி , மார்ச் 15 ஆம் தேதிதான் தன் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார். 2012 ஆண்டு முதல் ஆலியாவின் கார் ஓட்டுநர் சுனில் மற்றும் உதவியாளர் அன்மோல் ஆகிய இருவரும் உடன் இருப்பதாகவும், தன் சினிமா பயணத்தில் அவர்கள் இல்லாமல் ஆலியாவால் எதுவும் சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்ததால் தன் பிறந்தநாள் அன்று அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார். அதாவது, அவர்களின் வீடு வாங்கும் நீண்ட நாள் கனவை நிஜமாக்கியிருக்கிறார் ஆலியா. இருவரும் ஏற்கனவே மும்பையில் ஜுஹா குல்லி மற்றும் கார் தண்டா ஆகிய இடங்களில் வீட்டை புக் செய்துள்ளனர். அதை வாங்கவே ஆலியா உதவியிருக்கிறார்.


சமீபத்தில் ஆலியா 13 கோடியில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தன் ஆண் நண்பர் ரன்பீர் கபூருடன் வாழப்போவதாக கிசுக் கிசுக்களும் எழுந்தன.

அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து ”நான் புதிதாகத் தொடங்கவிருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கான அலுவலகம் அமைக்கவே வாங்கினேன். நான் என் வீட்டில் அம்மா, சகோதரிகளுடன் மகிழ்சியாகவே வாழ்ந்து வருகிறேன். அவர்களை பிரிந்து தனியே வாழும் எண்ணம் துளியும் இல்லை. அதேபோல் நான் வாழ்வதற்காக வீடு வாங்கினால் அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலும் எனக்குத் தெரிந்தே கட்டப்படும். அதன் ஒவ்வொரு அமைப்புகளும் என்னுடைய ரசனை வடிவில் நானே ரசித்துக் கட்டுவேனே தவிர மற்றவர்கள் கட்டிய வீட்டை வாங்க மாட்டேன் “ எனக் கூறி அந்த சர்ச்சையை முடித்து வைத்தார் .

First published: March 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading