ரன்பீர் கபூரைக் காதலிக்கிறேன்: ஒப்புக்கொண்ட ஆலியா!

ரன்பீர் கபூர், ஆலியா

சிறந்த நடிக்கைக்கான விருது பெற்றபோது இதை தெரிவித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர் என்ற செய்தி கிசி கிசுவாகவே இருந்துவந்த நிலையில் அது உண்மைதான் என்பதுபோல் மேடையில் ஐ லவ் யூ ரன்பீர் எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  இருவரும் அயன் முக்கர்ஜி தயாரிப்பில் ’பிரம்மஸ்த்ரா’ படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே இருவரும் காதலிக்கின்றார்களோ என்கிற கிசு கிசு எழுந்தது. அதேபோல் இருவரும் சேர்ந்து டேட்டிங் செய்யும் சம்பவங்களும் செய்திகளாக வந்திருந்தன. அதிலிருந்தே இந்த ஜோடி டாக் ஆஃப் த டவுனாக பேசப்பட்டனர்.


  இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மும்பையில் 64வது ஃபிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சன்னிலியோன், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சோனம் கபூர், கட்ரினா கைஃப் என பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அதில் ஆலியா ராஸி படத்தின் சிறந்த நடிக்கைக்கான விருது பெற்றார்.  அந்த விருதிற்கு நன்றி தெறிவிக்கும் விதமாக அவர் பேசியபோது, “மேக்னா (படத்தின் இயக்குநர்) என்னைப் பொருத்தவரையில் நீங்கள்தான் ராஸி கதாபாத்திரம். உங்களின் தைரியம் மற்றும் இனியமையான மனதுதான் என்னைக் கவர்ந்தது. நீங்கள் என் சினிமா வாழ்க்கைக்கு மிக முக்கிய நபர். விக்கி கௌஷல் நீங்கள் இல்லாமல் இது எதுவுமே சாத்தியம் கிடையாது. அடுத்ததாக என்னுடைய வழிகாட்டி கரண். வழிகாட்டி மட்டுமல்ல என் தந்தை, காவலன் அனைத்தும் நீங்கள்தான்.

  இன்றைய இரவு மொத்தமும் காதலால் அன்பால் பின்னப்பட்டது. அப்படியிருக்கும்போது இங்கு என்னுடைய காதல்... சிறந்த நபர்... ஐ லவ் யூ ரன்பீர்” என ஆலியா குறிப்பிடும் போது மொத்தக் கேமராக்களும் ரன்பீரை நோக்கி திரும்பிய போது கூச்சத்தில் கையால் கண்ணை மூடி கீழே குனிந்து சிரித்த காட்சி இருவருக்குமிடையேயான காதலை முற்றிலுமாக உறுதி செய்யும் விதமாக இருந்தது. அப்போது அங்கிருந்த ரசிகர்களும் உற்சாகத்தில் கூச்சலிட்டு விசிலடித்தனர்.   
  View this post on Instagram

   

  A post shared by Ranbir Kapoor Universe (@ranbirkapooruniverse) on


  இதற்கு முன் ஸீ விருது வழங்கும் நிகழ்ச்சியில் இருவரும் ரொமாண்டிக்காக நடனமாடிய வீடியோவும் அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  Published by:Sivaranjani E
  First published: