3 பேருக்காக ஒரு விமானத்தையே புக் செய்தேனா? அக்ஷய்குமார் அதிரடி விளக்கம்
3 பேர் பயணிப்பதற்காக ஒரு விமானத்தின் மொத்த டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ததாக வெளியான தகவலுக்கு அக்ஷய்குமார் விளக்கமளித்துள்ளார்.

குடும்பத்துடன் அக்ஷய்குமார்
- News18 Tamil
- Last Updated: June 1, 2020, 2:12 PM IST
3 பேர் பயணிப்பதற்காக ஒரு விமானத்தின் மொத்த டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ததாக வெளியான தகவலுக்கு அக்ஷய்குமார் விளக்கமளித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்ஷய்குமார் தமிழில் ரஜினிகாந்துக்கு வில்லனாக ஷங்கரின் 2.0 படத்தில் நடித்திருந்தார். மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா இந்தி ரீமேக்காக உருவாகியிருக்கும் லட்சுமி பாம் படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
சமீபத்தில் இவர் நடித்து ஹிட்டான ஃபில்ஹால் ஆல்பத்துக்காக நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக ஒரு வதந்தி கிளம்பிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் அக்ஷய்குமார். இந்நிலையில் தனது சகோதரி மற்றும் அவருடைய குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்வதற்காக அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்ததாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் இப்படி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதை சில வலைதளங்கள் செய்தியாகவும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பின.
இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் அக்ஷய்குமார், தனது சகோதரி கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் தான் இருக்கின்றார் என்றும், அவர் டெல்லி உட்பட வேறு எங்கும் செல்லவில்லை என்றும், அவருக்கு ஒரே ஒரு குழந்தை மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனது சகோதரியும் அவரது குழந்தையும் பயணிக்க விமானத்தின் மொத்த டிக்கெட்டையும் புக் செய்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், இது போன்ற வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும் படிக்க: 42 ஆண்டுகளுக்குப் பின் ‘அவள் அப்படித்தான்’ ரீமேக் - ஸ்ருதிஹாசனுக்கு முக்கிய ரோல்... ரஜினி & கமல் கேரக்டரில் யார் தெரியுமா?
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்ஷய்குமார் தமிழில் ரஜினிகாந்துக்கு வில்லனாக ஷங்கரின் 2.0 படத்தில் நடித்திருந்தார். மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா இந்தி ரீமேக்காக உருவாகியிருக்கும் லட்சுமி பாம் படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
சமீபத்தில் இவர் நடித்து ஹிட்டான ஃபில்ஹால் ஆல்பத்துக்காக நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக ஒரு வதந்தி கிளம்பிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் அக்ஷய்குமார்.