• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் - அமித் ஷாவுக்கு அக்‌ஷய்குமார் அட்வைஸ்!

உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் - அமித் ஷாவுக்கு அக்‌ஷய்குமார் அட்வைஸ்!

அமித் ஷா | அக்‌ஷய் குமார்

அமித் ஷா | அக்‌ஷய் குமார்

  • Share this:
    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நடிகர் அக்‌ஷய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்‌ஷய்குமாரிடம் நீங்கள் அமித் ஷாவிடம் கேட்க வேண்டியது ஏதாவது உள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அக்‌ஷய்குமார், அமித் ஷா உங்களிடம் நான் கேட்க வேண்டியது ஒன்றே ஒன்று தான். உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

    நம் நாட்டின் முக்கிய நபர் அவர். மாலை 6.30 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறுவேன். அது அவருக்கு நல்லது. அவர் அதைக் கடைபிடித்தால் அனைவருக்கும் நல்லது. சூரிய மறைவுக்குப் பின்னர் சாப்பிடக்கூடாது என்று நம் சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அது நமது உடல்நலத்துக்கு நல்லது” என்றார்.

    மேலும் படிக்க : இருட்டு அறையில் முரட்டு குத்து 2 - கவர்ச்சியில் கலக்க வரும் ஷாலு ஷம்மு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: