இணையத்தில் கசிந்த அந்தரங்க புகைப்படங்கள்: அக்‌ஷராஹாசன் விளக்கம்

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இணையத்தில் கசிந்த அந்தரங்க புகைப்படங்கள்: அக்‌ஷராஹாசன் விளக்கம்
அக்‌ஷராஹாசன் - நடிகை
  • News18
  • Last Updated: November 3, 2018, 7:31 PM IST
  • Share this:
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நடிகை அக்‌ஷராஹாசன் கடந்த 2015- ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே வேளையில் அவர் விகரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அவரது அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் நடிகர் கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்திருக்கும் அக்‌ஷராஹாசன், புகார் அளிப்பதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுபோன்று விளம்பரங்களில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்.


மேலும் தனது மற்றொரு பதிவில், “இந்த புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷடவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்” என்றும் பதிவிட்டிருக்கிறார்.

First published: November 3, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading