ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

படமே தொடங்கல.. அதற்குள் முடிந்த ஓடிடி வியாபாரம்.. அஜித் 62 படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

படமே தொடங்கல.. அதற்குள் முடிந்த ஓடிடி வியாபாரம்.. அஜித் 62 படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

அஜித் 62

அஜித் 62

Netflix : நெட்பிளிக்ஸ் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்ற பொதுவான கருத்து நிலவிவரும் நிலையில் அடுத்தடுத்த முக்கிய படங்களை வாங்கியுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வலிமை திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக அடிவாங்கியது. இந்த நிலையில் கட்டாயம் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வினோத் இருந்தார். அந்த தீவிரம் தற்போது வெற்றியாக வெளிவந்துள்ளது. இந்நிலையில் அஜித்தின் 62 படம் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சில நாட்களுக்கு முன்பு, இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளங்களில் "இப்போது AK62 என்ற பெரிய வாய்ப்பில் கவனம் செலுத்துகிறேன்!" என்று தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்கும் வில்லனை டிக் செய்துவிட்டதாக தெரிகிறது. அதன்படி அஜித்தின் 62-வது படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகினது. அதேபோல் சந்தானமும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் வேலைகளே இன்னும் தொடங்கப்படாத நிலையில் அதற்குள் ஓடிடி வியாபாரம் முடிந்துவிட்டது. அதன்படி அஜித்தின் 62வது படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நெட்பிளிக்ஸ், தியேட்டர் ரிலீசுக்கு பிறகு அஜித்தின் 62வது திரைப்படம் நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது. அதேபோல் விஷனுவிஷாலின் ஆர்யன், சந்திரமுகி 2 உள்ளிட்ட சில திரைப்படங்களையும் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. நெட்பிளிக்ஸ் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்ற பொதுவான கருத்து நிலவிவரும் நிலையில் அடுத்தடுத்த முக்கிய படங்களை வாங்கியுள்ளது நெட்பிளிக்ஸ்.

அனிருத் இசையமைக்கும் #AK62 படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் இன்னும் பெண் கதாபாத்திரத்தை இறுதி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

First published:

Tags: Actor Ajith, Netflix