'பேனர் வைக்க மாட்டோம்' : நெகிழ வைத்த அஜித் ரசிகர்களின் உறுதிமொழி

அஜித் ரசிகர்களின் போஸ்டர்

  • Share this:
பேனர் சரிந்து விழுந்த விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்ததை அடுத்து அஜித் படத்திற்கு பொது இடங்களில் எந்தவித பேனரும் வைக்கமாட்டோம் என அவரது ரசிகர்கள் உறுதிமொழி ஏற்று உள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் உயிரிழந்தார். சுபஸ்ரீயின் மரண செய்தி தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கை தானே முன்வந்த விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென கூறியது. பேனர் வைத்த அதிமுக நிர்வாகி மீதான வழக்கை நீதிமன்றம் கண்காணித்து வரும் என்று தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசிற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மதுரை அஜித் ரசிகர்கள், அஜித் படங்களுக்கு அவர் புகழை பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்து உள்ளனர்.

அஜித் - விஜய் ரசிகர்கள் என்றாலே பேனர் வைப்பதும், ட்விட்டரில் அவர்களுக்குள் சண்டை போட்டு கொள்வதும் தான் என்று சொல்லி வந்தவர்களுக்கு இவர்களின் செயல் பாராட்டை குவித்து வருகிறது.

Also Watch : EXCLUSIVE விபத்துக்குள்ளான சுபஸ்ரீயை லோடு ஆட்டோவில் ஏற்றப்பட்ட அவலம்

Published by:Vijay R
First published: