அஜித், விஜய் தான் ஹீரோ : நான் இல்லை - சிவகார்த்திகேயன்

news18
Updated: May 16, 2018, 6:54 PM IST
அஜித், விஜய் தான் ஹீரோ : நான் இல்லை - சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் - நடிகர்
news18
Updated: May 16, 2018, 6:54 PM IST
அஜித், விஜய் இவர்கள் தான் ஹீரோ, நான் இல்லை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடன இயக்குநர் தினேஷ் முதன்முதலாக நாயகனாக அறிமுகமாகும் ’ஒரு குப்பைக் கதை’ என்ற படத்தை இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி, ஆர்யா, சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ”என்னுடைய முதல் படத்திற்கு நடனம் அமைத்துக் கொடுத்த நடன இயக்குநர் தினேஷ்க்கு நான் செய்யும் கைமாறாக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். விஜய் டி.வி - யில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நான் திரைத்துரைக்கு வந்தேன். அப்போது எதற்கு உனக்கு இந்த வேலை ஹீரோவாக நடிப்பது கடினமான ஒன்று என என்னிடம் கூறினார்கள். நான் அப்போது அஜித், விஜய், ரஜினிகாந்த் இவர்கள் தான் ஹீரோ. நான் ஒரு நடிகன் என கூறினேன். எல்லோரும் போல் நானும் ஒரு குப்பைக் கதை திரைப்படத்தை காண ஆவலாக உள்ளேன் என பேசினார்.

ஒரு குப்பைக்கதை படம் மே 25 - ம் தேதி திரைக்கு வர உள்ளது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்