Ajith Valimai Update | சர்வதேச அளவில் கவனத்தை பெற்ற 'வலிமை அப்டேட்'

Youtube Video

அண்மை காலமாக இணையதளத்தில் அதிகம் விவாதத்திற்கு உள்ளான வார்த்தை என்ன என்றால்... அது வலிமை பட அப்டேட் தான். 

  • Share this:
    இணையத்தளத்தில் பலராலும் வறுத்தெடுக்கப்பட்டு வருபவர்தான் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர். இயக்குநர் வினோத் - நடிகர் அஜித் கூட்டணியில் ஏற்கெனவே நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனி கபூர், மீண்டும் அதே கூட்டணியை வைத்து வலிமை படம் எடுக்க தயாரானார்.

    ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய நாள்முதல் பல்வேறு தடைகள் தொடர, வலிமை படம் குறித்த சத்தமே வெளிவரவில்லை. இதனால் படத்தின் தகவலை வெளியிடும்படி போனிகபூருக்கு அன்புடன் டிவீட் செய்து வந்த அஜித் ரசிகர்கள், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து அலப்பறையை கொடுக்க ஆரம்பித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதன் விளைவு... வலிமை அப்டேட் எனும் வார்த்தை,... அரசியல் தலைவர்களிடம் தொடங்கி... இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி வரைக்கும் போய் சேர்ந்தது. இந்த அளவுக்கு ஒரு படத்தை பற்றி ஆர்வமாக கேட்க என்ன காரணம் என்பதை அஜித் ரசிகர்களே விளக்குகின்றனர்.



    அஜித்தை திரையில் காணும் ஆசையில் இப்படி செய்தாலும், இதனை ஒரு சிலர் விரும்புவதில்லை எனும் கருத்தும் அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஒரு திரைப்படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என தயாரிப்பாளரே முடிவு செய்வார். ஆனால், தற்போது அஜித் ரசிகர்களின் தேவைக்கான எதையாவது செய்ய வேண்டும் எனும் நிலைக்கு வலிமை படக்குழுவினர் தள்ளப்பட்டுள்ளனர்.
    Published by:Vaijayanthi S
    First published: