புத்தாண்டுக்கு வலிமை அப்டேட்... யுவன் சங்கர்ராஜா தகவல்

புத்தாண்டுக்கு வலிமை அப்டேட்... யுவன் சங்கர்ராஜா தகவல்

யுவன் சங்கர்ராஜா | அஜித்

புத்தாண்டு தினத்தில் வலிமை படம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக யுவன்சங்கர்ராஜா தெரிவித்துள்ளார்.

  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக ‘வலிமை’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு அறிக்கை வாயிலாக பதிலளித்த படக்குழு, படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமார், அனுபவமிக்க தயாரிப்பாளரான போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்” என்று தெரிவித்திருந்தது.

கடந்த 14-ம் தேதி‘வலிமை’ திரைப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதாக தெரிவித்திருந்த யுவன் சங்கர்ராஜா, தற்போது புத்தாண்டு தினத்தில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இச்செய்தி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: