Valimai First Look : அஜித் ரசிகர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த வலிமை டீம்

Valimai First Look : அஜித் ரசிகர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த வலிமை டீம்

போனி கபூர் - அஜித்

வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் ‘வலிமை’என்பதைத் தவிர படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். படக்குழு சரியான நேரத்தில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்திருந்தாலும் முருக கடவுள் தொடங்கி முதலமைச்சர் வரை அனைவரிடமும் தொடர்ச்சியாக அப்டேட் கேட்டு வந்தனர் அஜித்தின் தீவிர ரசிகர்கள்.

பிப்ரவரி 15-ம் தேதிக்கும் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் முடிவடையும் என சமீபத்தில் தெரிவித்திருந்த போனி கபூர் முதல்முறையாக ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “வலிமை படத்துக்காக நீங்கள் காண்பித்து வரும் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட உள்ளதால் சற்று பொறுமையாக இருக்கவும்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் ரசிகர்களின் கோரிக்கைக்கு படக்குழு செவி சாய்த்திருக்கிறது.



முன்னதாக வலிமை படத்தில் அஜித்தின் ஓபனிங் பாடல் குத்து பாடல் பாணியில் அமைத்திருப்பதாகவும், விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் அந்தப் பாடல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் ஒடிஷாவிலிருந்து திருவிழா ட்ரம்ஸ் கலைஞர்களை அழைத்து வந்து முதல் பாடலை பதிவு செய்து முடித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
Published by:Sheik Hanifah
First published: