டெனட் படத்தில் வலிமை பட கேமராமேன் - அஜித் ரசிகர்கள் உற்சாகம்

டெனட் படத்தில் வலிமை பட கேமராமேன் - அஜித் ரசிகர்கள் உற்சாகம்

கோப்பு படம்

‘வலிமை’ படத்தின் ஒளிப்பதிவாளர் ‘டெனட்’ படத்தில் பணியாற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

  • Share this:
வலிமை படத்தின் கேமராமேன் நீரவ் ஷா, கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனட்’ படத்தில் அசிஸ்டெண்ட் கேமரா ஆப்ரேட்டராக பணியாற்றியிருப்பதை கண்டுபிடித்த அஜித் ரசிகர்கள் அதை பெருமையாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே அஜித்துடன் கிரீடம், பில்லா ஆகிய இரண்டு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கும் இவர் தற்போது மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார்.

ஏற்கெனவே ‘பில்லா’ திரைப்படத்தில் அஜித்தை மிகவும் ஸ்டைலாக காண்பித்த நீரவ் ஷா, ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ‘வலிமை’ படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த ‘டெனட்’ படத்தில் நீரவ் ஷா பணியாற்றியிருப்பது ரசிகர்களிடமிருந்த ‘வலிமை’ மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

‘வலிமை’ குறித்து ஏதாவது அப்டேட் வெளியாகாதா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இந்த தகவல் கிடைத்துள்ளது. மொமெண்டோ, இன்ஸ்செப்சன், இன்டஸ்டெல்லர் என அறிவியல் படங்களை அசாத்தியமாக கையாளும் கிறிஸ்டோபர் நோலனுக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.



சமீபத்தில் அஜித்தின் பைக் வீலிங் புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில் ‘வலிமை’ படத்தின் ஒரு சில ஆக்‌ஷன் காட்சிகளை வெளிநாட்டில் புதிய தொழில்நுட்பம் மற்றும் சண்டைக் கலைஞர்களை பயன்படுத்தி படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: