ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு ட்ரெய்லர்.. சோஷியல் மீடியாவில் தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்.!

துணிவு ட்ரெய்லர்.. சோஷியல் மீடியாவில் தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்.!

துணிவு அஜித்

துணிவு அஜித்

Thunivu Trailer : துணிவு படம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆக்சன் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளதாக இயக்குநர் வினோத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் டிரெய்லர் இன்று மாலை` 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக ஜி ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். சோஷியல் மீடியாக்களில் துணிவு ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.முன்னதாக படத்தின் கதாப்பாத்திரங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் படி பத்திரிகையாளர் மைபா நாராயணன் கதாப்பாத்திரத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் நடித்துள்ளார். நடிகர் பிரேம், பிரேம் என்ற தனது சொந்தப் பெயரிலேயே நடித்திருக்கிறார். மேலும் நடிகர் பக்ஸ், ராஜேஸ் என்ற வேடத்திலும், நடிகர் ஜான் கொக்கென், கிரிஷ் என்ற வேடத்திலும் ராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த வீரா, ராதா என்ற வேடத்திலும் நடிகர் ஜிஎம் சுந்தர் முத்தழகன் என்ற வேடத்திலும் தெலுங்கு நடிகர் அஜய், ராமசந்திரன் என்ற வேடத்திலும் நடித்துள்ளனர்.

பிரபல நடிகர் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் தயாளன் என்ற காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை மஞ்சுவாரியர் கண்மணியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் படத்தைப் பகிர்ந்து அவரது பெயர் என்ன என்று யூகித்து சொல்லுங்கள் என ரசிகர்களிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து அவரது ரசிகர்கள் ஏகே-வாக இருக்கும், விநாயக் மகாதேவாக இருக்கும் என தங்களது யூகங்களை பதிவிட்டுவருகின்றனர். டிரெய்லர் அப்டேட் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. பஞ்சாப்பில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்ட கதாப்பாத்திரங்களைத் தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, சிபி போன்றவர்களும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

https://twitter.com/zeestudiossouth/status/1608829087656873984

துணிவு படம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆக்சன் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளதாக இயக்குநர் வினோத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் பரவையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் துணிவு படம் வெற்றியடைய பழனிக்கு சென்றனர். மேலும்,

துணிவு படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நீரவ் ஷா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிறச் செய்யும் விதமாக ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில், சில காட்சிகளை இப்ப தான் பார்த்தேன். நிறைய பட்டாசுகளை வாங்கிக்கோங்க, நிறைய என குறிப்பிட்டுள்ளார்.

கிரீடம், பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் அஜித் - நீரவ்ஷா இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Ajith, Thunivu