ஷாலினியிடம் கோபப்பட்ட அஜித் - சீக்ரெட் உடைத்த பப்லு

அஜித் - ஷாலினி

தன்னிடம் பேசாமல் சென்றதற்காக ஷாலினியிடம் அஜித் கோபப்பட்டதாக நடிகர் பப்லு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழ் சினிமாவில் 1971-ம் ஆண்டு வெளியான நான்கு சுவர்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு. தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் அவர் அஜித்துடன் அவள் வருவாளா படத்தில் நடித்திருப்பார். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக பயணம் படத்தில் நடித்திருந்த பப்லு, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.  அஜித்துக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது, "அஜித்தைப் பற்றி பல விஷயங்கள் நிறைய பேருக்கு தெரியும். அவர் என் தங்கை சோஃபியாவுடன் படித்தவர். இப்போதும் அஜித்துடைய பெர்சனல் நம்பர் என் தங்கைக்கு தெரியும். என்னை எங்கு பார்த்தாலும் சோஃபியா எப்படி இருக்கிறர் என்று நலம் விசாரிப்பார். நீ எப்படி இருக்க என்று கேட்க மாட்டார். இந்தத் திரையுலகில் இருக்கும் ஒரே ஜென்டில்மேன் அஜித் மட்டும் தான்.

  ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றேன். அங்கு ஷாலினியும் அவரது மகளும் சாப்பிட வந்திருந்தார்கள். நான் ஷாலினியுடன் பணியாற்றியதில்லை. எனவே நான் போய் ஹாய் சொல்லி, அவர் கண்டுகொள்ளவில்லை என்றால் சரியாக இருக்காது என்று விட்டுவிட்டேன். இதே மாதிரி இரண்டு முறை நடந்தது.

  அடுத்த முறை அந்த ஹோட்டல்காரர் போன் செய்து உங்களிடம் ஷாலினி பேச வேண்டும் என்று உங்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டார். கொடுக்கலாமா என்று கேட்டார். கொடுங்கள் என்று சொன்னேன். அவர்கள் நம்பர் கொடுத்த அடுத்த நிமிடம் ஷாலினி எனக்கு போன் செய்தார்.

  மன்னிக்கவும், உங்களை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று தான் பேசவில்லை. அஜித்திடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர் ரொம்ப கோபித்துக் கொண்டார். என்னுடைய நண்பர். சீனியர் நடிகர். பள்ளியிலிருந்து எனக்கு சீனியர். ஏன் பேசாமல் வந்தாய் எனக் கேட்டதாக ஷாலினி என்னிடம் சொன்னார். இதை அஜித் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் அந்த அளவுக்கு ஜென்டில்மேன்” என்று பப்லு கூறியுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: