Home /News /entertainment /

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் மங்காத்தா - ரசிகர்கள் கொண்டாட்டம்

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் மங்காத்தா - ரசிகர்கள் கொண்டாட்டம்

மங்காத்தா

மங்காத்தா

தனியார் தொலைக்காட்சியில் மங்காத்தா திரைப்படம் ஒளிபரப்பான நேரத்திலேயே அதை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், வைபவ், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த இத்திரைப்படத்தை தனியார் தொலைக்காட்சி தற்போது மீண்டும் ஒளிபரப்பியதை அடுத்து ட்விட்டரில் படம் தொடர்பான கருத்துகள் அதிகம் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் மங்காத்தா என்ற ஹேஸ்டேக்கும் இடம்பிடித்தது.

நேற்று நடிகர் விஜய் - த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது அதை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடினர் விஜய் ரசிகர்கள். அதேபோல் இன்று அஜித் ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த மங்காத்தா திரைப்படத்தை ட்ரெண்டாக்கி மகிழ்கின்றனர்.

மங்காத்தா திரைப்படத்தைப் போல் தற்போது அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமையும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: துள்ளுவதோ இளமை ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட ஷெரின்!
Published by:Sheik Hanifah
First published:

அடுத்த செய்தி