• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • போனி கபூருக்காக அஜித் எடுத்த அல்டிமேட் முடிவு?

போனி கபூருக்காக அஜித் எடுத்த அல்டிமேட் முடிவு?

போனி கபூர் | அஜித்

போனி கபூர் | அஜித்

நடிகர் அஜித் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்து தயாரிப்பாளர் போனி கபூருக்கு இ-மெயில் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    கொரோனா ஊரடங்கால் தமிழ் சினிமா முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகள் நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் இருக்கின்றன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் இனி எப்பொழுது திரையரங்குகள் திறக்கப்படும் என்ற கேள்விக்கு மட்டும் யாரிடமும் பதில் இல்லை.

    மேலும் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரையரங்கிற்கு மக்கள் வருவார்களா என்ற சந்தேகம் நீடிக்கிறது. இதுமட்டுமல்லாமல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அரசு கட்டுப்பாடுகளுக்கு இணங்கி ஒரு இருக்கை விட்டு மறு இருக்கையில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் திரையரங்க உரிமையாளர்களும் முன்பு போல ஒரு திரைப்படத்திலிருந்து லாபம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்த காரணங்களை கருத்தில் கொண்டு மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கும் பட்சத்தில் தயாரிப்பாளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் நடிகர்களும், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதனை ஏற்று நடிகர் விஜய் ஆண்டனி ஹரிஷ் கல்யாண் இயக்குனர் ஹரி உள்ளிட்ட ஒரு சில பேர் மட்டும் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர். முன்னணி நடிகர்கள் பலரும் சம்பளக் குறைப்பு தொடர்பாக வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. இதில் நடிகர் அஜித் முதலாவாது ஆளாக வந்து தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொள்வதாக வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு இ-மெயில் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மேலும் கொரோனா பிரச்னை முடிந்தவுடன் வலிமை படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று போனி கபூரிடம் அஜித் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக மலையாள நடிகர்கள் தங்கள் ஊதியத்தில் 50 சதவீதத்தை விட்டுத்தருவதாக மலையாள நடிகர் சங்கமான அம்மா அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: