சாலையோர சாட் கடைக்கு கேஷ்வல்லாக சென்ற அஜித் : வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித்

வாரணாசியில் உள்ள சாலையோர சாட் கடை உரிமையாளர்,அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 • Share this:
  நடிகர் அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். வலிமை படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் தொடர்ந்து படக்குழுவிடம் கேட்டு வருகின்றனர். ஆனால் எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்திட்ட 80 சதவீதம் முடிந்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

  வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு தனது நண்பர்களுடன் அஜித் சென்றுள்ளார்.அங்கு காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அருகில் உள்ள சாலையோர கடைக்கு சென்றுள்ளார்.

  அஜித் தொப்பி மற்றும் முகக்கவசம் ஆகியவை அணிந்திருந்ததால் இவர் யார் என்று முதலில் உரிமையாளருக்கு தெரியவில்லையாம் . பின்பு முகக்கவத்தை கழட்டியதும் அஜித்தை பார்த்து உரிமையாளர் அடையாளம் கண்டுள்ளார். அந்த கடையில் மற்றவர்களை போலவே நின்றுக்கொண்டே சாட் வகைகளை அஜித் சாப்பிட்டுள்ளார். அதோடு அங்கு சாட் தயாரிக்கப்படுவதையும் அவரின் செல்போனில் படம் பிடித்துள்ளார்.மறுநாளும் அந்த கடைக்கு சென்று அஜித் சாப்பிட்டுள்ளார்.

  அந்த கடையின் உரிமையாளர், அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

   

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: