பைக் ரைடிங் கதைக்கு அஜித் கொடுத்த பாராட்டு - படக்குழு நெகிழ்ச்சி

பைக் ரைடிங் கதைக்கு அஜித் கொடுத்த பாராட்டு - படக்குழு நெகிழ்ச்சி

அஜித் குமார்

பைக் ரைடர்களின் கதையை பேசும் தெலுங்கு பட டீசரைப் பார்த்து அஜித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். பைக்ரேஸ் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தெலுங்கில் ‘இதே மா கதா’ திரைப்படத்தின் டீசரைப் பார்த்த அஜித் பாராட்டு தெரிவித்திருக்கும் செய்தியை அந்தப் படத்தின் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதே மா கதா படத்தின் டீசர் குறித்து அஜித் கூறியிருப்பதாவது, “எனது நீண்ட கால நண்பர் ராம் பிரசாத் என்னிடம் இத்திரைப்படத்தின் டீசரை காட்டினார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உண்மையிலேயே காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் எனக்கு பிடித்திருந்தது. எனக்கு பைக் ரைடிங் பிடிக்கும். அதனால் என்னை எளிதில் டீசருடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. விரைவில் உங்களை தனிப்பட்ட முறையில் விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன்.படக்குழுவினர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”. என்று கூறியுள்ளார் அஜித்.

அஜித் தங்களை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியது, மிகுந்த மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிப்பதாக தெரிவித்திருக்கும் படக்குழுவினர் அஜித்துக்கு தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர். குரு பவண் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சுமந்த் அஸ்வின், ஸ்ரீகாந்த், பூமிகா, தன்யா ஹோப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பைக் பயணத்தை கதைக்கருவாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.அஜித் இத்திரைப்படத்தை பாராட்டியிருப்பது படத்துக்கான விளம்பரமாக மாறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: