Home /News /entertainment /

‘தல 60’ படத்தில் அஜித்தின் புதிய லுக்? - வைரலாகும் புகைப்படம்

‘தல 60’ படத்தில் அஜித்தின் புதிய லுக்? - வைரலாகும் புகைப்படம்

அஜித் குமார்

அஜித் குமார்

அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
    அடுத்த படத்துக்காக அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ளதாகவும், அதற்கான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்.

    அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் 60-வது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளார். இந்தப் படத்துக்காக அஜித் தனது உடல் எடையைக் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது.



    விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் உடல் எடையை அதிகப்படுத்தியிருந்த அஜித், தனது 60 -வது படத்தில் ஸ்லிம்மாக தோன்ற இருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    தன்னிகரில்லா ‘தல’ அஜித் அறிமுகப்படுத்திய முன்னணி இயக்குநர்கள்!

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Ajith, Thala 60

    அடுத்த செய்தி