ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சோஷியல் மீடியாவில் விரைவில் இணையும் 'துணிவு' அஜித்? தீயாய் பரவும் தகவல்!

சோஷியல் மீடியாவில் விரைவில் இணையும் 'துணிவு' அஜித்? தீயாய் பரவும் தகவல்!

அஜித்

அஜித்

Ajith Kumar | ரசிகர்களால் செல்லமாக 'தல' என அழைக்கப்பட்டு வரும் அஜித் இதுவரை எந்த ஒரு சமூக வலயத்தள பக்கங்களிலும் இணையாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தனக்கான ஒரு சமூக வலைதள பக்கத்தை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தனது ரசிகர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் தனது ரசிகர்களை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்த அஜித் அவர்களிடம் 'சுவர்களில் ஏறி தன்னை பார்க்க முயற்சிப்பதையும், சாலையில் தனது காரை தொடர்வதையும் செய்ய வேண்டாம்' என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ரசிகர்களை வரவழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார் அஜித்.

ரஜினி, கமல், விஜய் என பெரும்பாலான நடிகர்களும் சமூக வலைத்தளத்தில் தங்களுக்கான தனிப்பட்ட கணக்கை பல வருடங்களுக்கு முன்பே தொடங்கியிருந்தாலும் எப்போதும் தனிப்பட்ட நபராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது தான் தன்னுடைய ரசிகர்களுடன் நேரடியாக கனெக்ட் செய்யும் விதத்தில் சோசியல் முடியாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தனது பைக்கில் ரோடு ட்ரிப் சென்ற அஜித்தின் புகைப்படங்களை அவருடைய நண்பர் தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அவரை பற்றிய அனைத்து அப்டேட்ககள், புகைப்படங்கள் என மற்றவர்களால் தான் பகிரப்பட்டு வந்த நிலையில், இப்போது அஜித் தனக்காக பிரத்தியோக சமூக ஊடக கணக்கை தொடங்க இருப்பதாகவும், இனி தனது புகைப்படங்களை நேரடியாக அவரே சமூக வலைத்தளத்தில் பதிவேற்ற விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அஜித் சமூக ஊடகங்களில் சேருவது பற்றி இதுவறை எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அஜித் தரப்பில் இருந்து வெளிவரவில்லை. தொடக்கத்தில் இருந்தே சோஷியல் மீடியாவில் அஜித் இல்லாத நிலையில் இனியும் அவர் இணைவது சந்தேகம்தான் என நெருக்கமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
View this post on Instagram

 

A post shared by Manju Warrier (@manju.warrier)தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' படமானது 2023 பொங்கல் அன்று திரையரங்கில் வெளியாகிறது. மேலும் இப்படத்தின் முதல் சிங்கிள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது.

Also Read : யாரைக் குறிப்பிடுகிறார் வடிவேலு? அப்பத்தா பாடல் வரிகளில் வம்பிழுக்கும் வைகைப்புயல்!

மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ள 'துணிவு' படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் இப்படத்தின் முதல் சிங்கிளான 'சில்லா சில்லா' பாடலை வைசாக் எழுதி அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Actor Ajith, Social media, Tamil News