எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படம் இன்று வெளியாகி கலவயான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இருப்பினும் ரசிகர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிகிறது. படத்தில் வங்கிகள் கிரெடிட் கார்டு மியூச்சுவல் ஃபண்ட் பெர்சனல் லோன் என்ற பெயரில் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று இப்படம் பேசுகிறது. மேலும் தனியார் வங்கிகளில் கட்டண கொள்ளை குறித்தும் விரிவாக அலசுகிறது.
அஜித் தன்னுடைய முதல் காட்சியிலேயே ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார். அவரின் உடல்மொழி, வசனங்கள், நக்கலான சிரிப்பு, ஸ்டைலான நடனம் என அனைத்தும் அட்டகாசமாகவும், அமர்களமாகவும் அமைந்திருக்கின்றன. விறுவிறுப்பான முதல் பாதி, சமூக கருத்துகள் கொண்ட இரண்டாம் பாதி என இந்தப் படம் ரசிகர்களக் கவர்ந்துள்ளது. இதுவரை பார்க்காத வேறொரு அஜித்தை ரசிகர்களின் கண் முன் நிறுத்தியுள்ளார் எச்.வினோத். படத்தில் இயக்குநர் வினோத்தின் வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளன.
படம் வெளியாகும் ஒரு வாரத்துக்கு முன்பு நடிகர்களை அவர்கள் கதாப்பாத்திரத்தின் பெயர்களுடன் படக்குழு அறிமுகப்படுத்தியது. மேலும் அஜித்தின் பெயர் என்னவாக இருக்கும் என சொல்லுங்கள் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு ரசிகர்கள் அஜித்தின் பெயர் விநாயக் மகாதேவ்வாக இருக்கும் எனவும் அஜித்தின் கதாப்பாத்திரம் மங்காத்தா படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் ரசிகர்கள் தங்கள் யூகங்களை வெளியிட்டுவந்தனர். அதற்கேற்ப படத்தின் டிரெய்லரிலும் அஜித்தின் பெயர் குறிப்பிடவில்லை.
இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்து. படம் பார்த்த ரசிகர்களுக்கு அவர்களே எதிர்பாராத ட்விஸ்ட்டை வைத்திருந்தார் இயக்குநர் வினோத். படத்தில் நடிகர் அஜித்தின் கதாப்பாத்திரத்துக்கு பெயரே இல்லை. இது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி வரை பெயரை சொல்லவே இல்லையே, இது என்ன புது ட்ரெண்டா என அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Thunivu, Varisu