4000 கி.மீ-க்கு மேல் ரோட் ட்ரிப் போன அஜித்! எங்கு போனார் தெரியுமா?
வாரணாசியில் உள்ள ரோட்டோர கடையில் அஜித் சாப்பிட்ட படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அஜித்
- News18 Tamil
- Last Updated: January 18, 2021, 11:20 AM IST
நடிகர் அஜித் 4000 கி.மீ-க்கு மேல் பைக்கில் ரோட் ட்ரிப் சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல், கார் மற்றும் பைக் ரேஸ், ஃபோட்டோகிராஃபி, பிரியாணி சமைப்பது என மற்ற விஷயங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். தற்போது இயக்குநர் ஹெச்.வினோத்தின் ‘வலிமை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வாரணாசியில் உள்ள ரோட்டோர கடையில் அஜித் சாப்பிட்ட படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால் அவர் எதற்காக அங்கு சென்றார் என்பது குறித்து தகவல் தெரியாமல் இருந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்திருக்கிறது. அதாவது அஜித் சிக்கிமுக்கு பைக்கிலேயே ரோட் ட்ரிப் சென்றதாகவும், போகும் வழியில் வாரணாசியில் உணவு அருந்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக் கிழமை சிக்கிமை சென்றடைந்த அஜித், மீண்டும் பைக் மூலமாகவே சென்னைக்கு திரும்புகிறாராம். சென்னையிலிருந்து சிக்கிம் 2400 கி.மீ, அப்படியெனில் ஏறக்குறைய 4500 கி.மீ தூரம் அவர் பைக்கிலேயே பயணிக்க நேர்ந்திருக்கிறதாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல், கார் மற்றும் பைக் ரேஸ், ஃபோட்டோகிராஃபி, பிரியாணி சமைப்பது என மற்ற விஷயங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். தற்போது இயக்குநர் ஹெச்.வினோத்தின் ‘வலிமை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வாரணாசியில் உள்ள ரோட்டோர கடையில் அஜித் சாப்பிட்ட படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால் அவர் எதற்காக அங்கு சென்றார் என்பது குறித்து தகவல் தெரியாமல் இருந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்திருக்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்