கஜா நிவாரணத்துக்கு அஜித் கொடுத்தது ரூ.5 கோடியா? வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் கஜா நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் கொடுக்கவில்லை, 5 கோடி ரூபாய் கொடுத்ததாக அவரது தீவிர ரசிகரும், விநியோகஸ்தருமான 7ஜி சிவா பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Updated: December 3, 2018, 10:28 PM IST
கஜா நிவாரணத்துக்கு அஜித் கொடுத்தது ரூ.5 கோடியா? வைரலாகும் வீடியோ
Ajithkumar

Updated: December 3, 2018, 10:28 PM IST
நடிகர் அஜித் கஜா நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் கொடுக்கவில்லை, 5 கோடி ரூபாய் கொடுத்ததாக அவரது தீவிர ரசிகரும், விநியோகஸ்தருமான 7ஜி சிவா பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கஜா புயல் பாதிப்புகளுக்காக தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நியூஸ்18 தமிழ்நாடு இணையதளத்தில் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம். அஜித்-ன் உதவியை பலரும் பாராட்டி இருந்தனர். ஆனால் தற்போது, சேலத்தைச் சேர்ந்த அஜித்-ன் தீவிர ரசிகரும், விநியோகஸ்தருமான 7ஜி சிவா, அஜித், கஜா நிவாரணத்துக்காக ரூ.15 லட்சம் கொடுக்கவில்லை, 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார் என்று ட்விட்டரில் 7ஜி சிவா பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

ajith

அந்த ட்விட்டர் வீடியோவில் சிவா, ``யாருக்குமே தெரியாது, 15 லட்சம் கொடுத்ததாக சொல்வார்கள். 15 லட்சம் கிடையாது, 5 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். நான் அவருடன் பெர்சனலா பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன். அவரது கேரக்டர் எனக்குத் தெரியும். அவர் தான் செய்த உதவிகளை வெளியே சொல்லமாட்டார். உதவி செய்வதை வெளிப்படையாக தெரிவிக்கமாட்டார்’’ என்று பேசியுள்ளார்.

 இதுகுறித்து நடிகர் அஜித் தரப்பு கூறியதாவது, ``அஜித் செய்யும் நன்கொடைகள் குறித்த தகவல்கள் அனைத்துமே செய்தித் தொடர்பாளர், சம்பந்தப்பட்டவர்கள் வாயிலாக அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும். ஆனால், இத்தகைய போலியான தகவல்களை, அதுவும் மிகவும் உணர்வுபூர்வமான விஷயத்தில் இணையதளம் வாயிலாக பரப்புவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது’’ என்றார்கள்.

கஜா புயல் பாதிப்பு: அஜித் செய்த உதவியை வெளியிட்ட தமிழக அரசு

First published: December 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...