• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கொரோனா பரவலை தடுக்க தல அஜித் கொடுத்த அசத்தல் ஐடியா

கொரோனா பரவலை தடுக்க தல அஜித் கொடுத்த அசத்தல் ஐடியா

கொரோனா அதிகம் பாதிகப்பட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் ஐடியாவை நடிகர் அஜித் தான் கொடுத்தார் என்று மருத்துவர் கூறியுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா ட்ரோன்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட மருத்துவர் கார்த்திகேயன் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் ஐடியாவை கொடுத்தவர் நடிகர் அஜித்தான் என்று கூறியுள்ளார்.

    அரை மணி நேரத்தில் 16 லிட்டர் கிருமிநாசினி தெளிக்கும் திறன் கொண்ட ட்ரோன்களைத்தான் அஜித் அறிவுரையின் பேரில் உருவாக்கியுள்ளனர். இதனைக் கொண்டு அரை மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அளவு பரப்பளவில் கிருமி நாசினிகளை தெளித்து விடலாம். இதன் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்று வெற்றி அடைந்துள்ளது.

    இந்நிலையில் இதனை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை #AjithLedDroneToFightCorona என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு 'தக்‌ஷா' என்னும் மாணவர்களின் ஆராய்ச்சி குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகாராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்தக் குழு பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து, சாதனைகளைப் படைத்தது. பெங்களூருவில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகள் வென்றது குறிப்பிடதக்கது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: