அஜித் நடித்து வரும் ‘வலிமை’ பட அப்டேட் வேண்டி முருகனிடம் வேண்டுதல் செலுத்திய ரசிகர்களின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் எச்.வினோத்தின் அதிரடி திரில்லர் படமான ’வலிமை’யில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில், நடிகர்-இயக்குனர் இருவரும் இரண்டாவது முறை இணைந்திருக்கிறார்கள். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
சென்னை மற்றும் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் முக்கியமான காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள் வலிமை படக்குழுவினர். ரசிகர்கள் இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.
இது குறித்து கடைசியாக சுரேஷ் சந்திராவிடமிருந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. அதில் மிகவும் கடினமாக உழைக்கும் அஜித் குமாரும், தயாரிப்பாளர் போனி கபூரும் நிச்சயமாக படத்தின் அப்டேட்டைக் கொடுப்பார்கள். அதுவரை, ரசிகர்கள் தயவுசெய்து பொறுமையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
அப்போதிலிருந்து, விரைவில் ஒரு புதிய அப்டேட்டைப் பெற அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் வலிமை அப்டேட்டைக் கேட்க வித்தியாசமான அணுகுமுறையைக் கையாள்கிறார்கள். தற்போது சில படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அதில் ரசிகர்கள் ஒரு பேனரை வைத்திருப்பதைக் காணலாம்.“Pls வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா” என அதில் எழுதப்பட்டுள்ளது.
அதாவது வலிமை அப்டேட் தர சொல்லி, முருகனிடம் அஜித் ரசிகர்கள் வேண்டுதல் விடுத்திருக்கும் பேனர் தான் அது!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்