• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Valimai Update: இந்தியா-நியூசிலாந்து இறுதிப் போட்டி - இங்கிலாந்திலும் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்

Valimai Update: இந்தியா-நியூசிலாந்து இறுதிப் போட்டி - இங்கிலாந்திலும் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்

வலிமை அப்டேட்

வலிமை அப்டேட்

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் கிட்டத்திட்ட வலிமை படத்தின் பூஜை ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர். தற்போது இந்தியா மட்டுமில்லாமல் பிற நாடுகளிலும் வலிமை அப்டேட்டை விடாமல் கேட்டு வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

  • Share this:
    நடிகர் அஜித் வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக கடினமாக உழைப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் 2019  ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் ஹிந்தியில் வெளியான ‘பிங்க்’படத்தின் ரீமேக்காகும். இந்த படம் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றதை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் கூட்டணி வெற்றிப்பெற்றதையடுத்து மீண்டும் இந்த கூட்டணி தொடர்வதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதையடுத்து 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படத்தின் பெயரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதையடுத்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அஜித் ரசிகர்கள் வலிமை என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர். பின்பு படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால் படப்பிடிப்பு நடைப்பெறவில்லை. பின்பு இந்த ஆண்டு இரண்டாம் அலைக்கு முன்பு வலிமை படப்பிடிப்பு சில நாட்கள் நடைப்பெற்றது. அப்போது அஜித்தின் புகைப்படங்கள் சில சமூகவலைதளங்களில் வைரலாகின.

    Also Read: மனைவியுடன் மீண்டும் இணைந்த நடிகர் ரஞ்சித் - குவியும் வாழ்த்துகள்

    கிட்டத்திட்ட ஓராண்டுகளாக படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாததால் விரக்தியான அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்க தொடங்கினர். அந்த வகையில் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, இங்கிலாந்து வீரர் மொயின் அலி இடமும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டனர். பின்பு அஜித் தரப்பிலிருந்து கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அதில், இனி வலிமை குறித்த தகவலை கோரிக்கையாக வைக்க வேண்டாம் எனவும் சரியான நேரத்தில் படக்குழுவே வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    Must Read : கொரோனா காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா - பிரதமர் மோடி

    இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போதுஅஜித் ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் வேண்டுமென பதாகைகளை ஏந்தி கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தனர். வலிமை அப்டேட்டை இங்கிலாந்து வரை விடாமல் விரட்டி விரட்டி கேட்கும் அஜித் ரசிகர்களால் படக்குழுவினர் பெரும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: